கலைஞர் உணவகம் தொடங்க மத்திய அரசு உதவ வேண்டும் என அமைச்சர் கோரிக்கை.
ஏழை, எளியவர்களுக்கு, சிறந்த ஆட்சியை வழங்குவோம் என்று கூறிய தி.மு.க-வின் சாயம் நாளுக்கு நாள் வெளுத்து வருகிறது என்பதை தமிழக மக்கள் மெல்ல மெல்ல தற்பொழுது உணர துவங்கியுள்ளனர்.
- மதுக்கடைகளை மூடப்படும்.
- நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.
- சேலம் 8 வழிச்சாலை திட்டம் நிறுத்தப்படும்.
என்று ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி தெளித்து முதல்வராக பொறுப்பு ஏற்று கொண்டார் ஸ்டாலின். ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே நிதி நெருக்கடி இருப்பதாக காரணம் கூறி குடும்ப தலைவிக்கு மாதம் ரூ. 1,000 கொடுக்க வாய்ப்பில்லை என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சமீபத்தில் கூறியது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் கலைஞர் உணவகம் தொடங்க மத்திய அரசு 100% உதவி செய்ய வேண்டும் என்று அமைச்சர் கோரிக்கை விடுத்து இருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநில அரசின் திட்டத்திற்கு மத்திய அரசு ஏன்? உதவி செய்ய வேண்டும், என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.