கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக தி முக கவுன்சிலர் மற்றும் அக்கட்சி பிரமுகர் வீட்டில் என்.ஐ.ஏ.நடத்திய சோதனை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. கோவை அரபிக் கல்லூரில் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆள்சேர்பது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக என்.ஐ.ஏ. தெரிவித்துள்ள தகவலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் உக்கடத்தின் கோட்டைமேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி கார் வெடித்து சிதறியது. இந்த காரை ஓட்டி வந்த அதேப்பகுதியை சேர்ந்த ஜமேசா முபினின் என்ற 28-வயது இளைஞர் உயிரிழந்தார். இந்த சம்பவம் கோவை மட்டுமின்றி தமிழக முழுவது அச்சத்தை ஏற்படுத்தியது. காரில் கொண்டு வரப்பட்ட சிலிண்டர் வெடித்ததே இச்சம்பத்திற்கு காரணம் என்று கூறப்பட்ட நிலையில், இது தீவிரவாத செயலுக்கான சதியாக இருக்க கூடுமே? என்ற சந்தேகம் இருப்பதால் அதன் பின்னணியில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமழக பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. இது தொடர்பான விசாரணையை உடனடியாக என்.ஐ.ஏ. கையில் எடுத்தது. இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த சனிக்கிழமை தமிழக முழுவதும் சென்னை உட்பட 31 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. கோவையில் மட்டும் 22-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத் தப்பட்டது. சென்னையில் திருவிக நகர் முஜ்பீர் ரகுமான் என்பவர் வீட்டிலும், நீலாங்கரை, கோவையில் உக்கடம், போத்தனூர், கரும்புக்கடை, ஜிஎம் நகர், தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் முகமது இத்ரிஸ் என்பவரின் வீடு உள்பட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.கோவையில் உள்ள அரபிக்கல்லூரியில் பயங்கரவாத செயலுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து என்.ஐ.ஏ. சோதனை நடத்தப்பட்டது. கோவை அரபிக் கல்லூரியில் படித்தவர்கள் மற்றும் அதில் தொடர்புடையவர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த நிலையில் ஜமேசா முபின் அரபிக் கல்லூரில் படித்தவர் என்பதால் அவருடன் படித்தவர்கள் வீடுகள், கோவை ஜி.எம்.நகர், குனியமுத்தூர் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.
திமுக கவுன்சிலர் நிர்வாகி வீட்டில் நடததப்பட்ட சோதனை!
கரும்புக்கடை பகுதியில் உள்ள திமுக இணைஞரணி நிர்வாகியான தமிம் அன்சாரி என்பவர் வீட்டிலும் பெரிய பெருமாள் கோயில் வீதியில் உள்ள கோவை மாநகராட்சி 82-வது கவுன்சிலர் முபசீரா வீட்டிலும் சோதனை நடதப்பட்டது. அவரது குடும்பதினரிடமும் அதிகாரிகள் விசாரண நடத்தினர். திமுக மாநகராட்சி கவுன்சிலர் முபசீரா கோயம்புத்தூர் வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவராகவும் உள்ளார். முபசீராவின் கணவர் ஆரிஃப்-இடமும் விசாரணை நடத்தப்பட்டது. குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டுள்ள சனோஃபர் அலி என்பவர் கடை அருகே ஆரிஃப் கடை வைத்திருந்த நிலையில் அது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
என்.ஐ.ஏ. அதிர்ச்சி தகவல்!
அரபி மொழி வகுப்பு என்ற பெயரில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு ஆள் சேர்க்கும் முயற்சி நடத்தப்பட்டதாக என்.ஐ.ஏ.அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக் என்.ஐ.ஏ. வெயியிட்டுள்ள அறிக்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்பது மற்றும் அது தொடர்பாக பிரச்சாரம் செய்வோரை கண்டறிய தமிழ் நாடு மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் 31 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டதாகவும் இதில் பயங்கரவாத செயல்கள் இருக்கும்மென்ற சந்தேகத்துக்குரிய செல்போன்கள், லேப்டாப்கள், ஹாட்டிஸ்குகள் உள்ளூர் மொழிகள் மற்றும் அரசு எழுத்துகளை கொண்ட ரயிரிகள் மற்றும் ஆவண கள் மொத்தம் ரூ.60-லட்சம்,18,200 டாலர்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாகவும் என்.ஐ.ஏ. தெரவித்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த முகவர்கள் இணைஞர்களை மூளைச்சலவை செய்து அவர்கள் குழுவாக உருவாக்கி வருவதாகவும் சமூக உடகங்களில் பரங்கரவாதத்தை வளர்த்து வருவதாகவும் என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. இவர்களே பின்னாளில் கோவை குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்களில் தொடர்புடைய தீவிரவாதிகளா மாறுவதாகவும் என்.ஐ.ஏ.அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் கோவையில் திமுக கவுன் சிலர் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ.சோதனை நடத்தியது பலவேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.