கோவை மாவட்டத்தில் குப்பைத் தொட்டியோடு சேர்த்து தார்ச்சாலை அமைக்கப்பட்டிருப்பது திராவிட மாடல் ஆட்சிக்கு இன்னொரு எடுத்துக்காட்டு என்று என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் 2011-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டுவரை அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தது. அப்போது, பொதுப்பணித்துறை, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட துறைகளில் விடப்படும் அரசு ஒப்பந்தப் பணிகள் அனைத்தும் அ.தி.மு.க.வினரும், அக்கட்சியின் ஆதரவாளர்களுமே எடுத்துக் கொண்டனர். இதனால், தி.மு.க.வினருக்கு கான்ட்ராக்ட் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருந்தது. ஆகவே, தி.மு.க.வினரால் பணம் சம்பாதிக்க முடியவில்லை. இதன் காரணமாக, தி.மு.க.வினர் பெரும் விரக்தியில் இருந்தனர்.
இந்த நிலையில், 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. ஆட்சியை கைப்பற்றியது. இதன் பிறகு நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் தி.மு.க.வே பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற்றது. இதையடுத்து, அரசு ஒப்பந்தப்புள்ளிகள் அனைத்துமே தி.மு.க.வினருக்கும், அக்கட்சியின் அனுதாபிகள் மற்றும் ஆதரவாளர்களுக்குமே ஒதுக்கப்பட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக சம்பாதிக்க முடியாமல் இருந்த தி.மு.க.வினருக்கு இது மிகவும் வசதியாகப் போய்விட்டது. கான்ட்ராக்ட்களை கடனுக்கு செய்து வருகின்றனர்.
உதாரணமாக, வேலூர் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டபோது, வீதிகளின் ஓரங்களில் வீடு மற்றும் கடைகளை ஒட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களோடும், ஆழ்துளை குடிநீர் குழாய்களோடும் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது அம்பலமாகி ஊரே சிரித்தது. அதேபோல, ஒரே அறைக்குள் இரு கழிப்பிடங்களை அமைத்த சம்பவத்தை பார்த்து சந்தி சிரித்தது. மேலும், கழிவுநீர் ஓடிக்கொண்டிருக்கும் கழிவுநீர் கால்வாயில் அப்படியே புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைத்தது கேலிக்கூத்தானது.
எல்லாவற்றுக்கும் மேலாக, மாணவர்களின் உயிரை துச்சமென நினைத்து பள்ளிகளின் சுற்றுச்சுவரை தரமற்ற அமைத்ததும், அச்சுவர் இரண்டே நாட்களில் இடிந்து விழுந்ததும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளது. இது மட்டுமா? சாலைகளை விரிவாக்கம் செய்யும்போது, நடுவில் இருந்த மின்கம்பங்களை அகற்றாமல் அப்படியே சாலை அமைத்த விவகாரம் காண்போரை கைகொட்டி சிரிக்க வைத்தது. இந்த நிலையில்தான், சாலையோரம் இருந்த குப்பைத் தொட்டியைக் கூட அகற்றாமல் அப்படியே சாலை அமைத்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்தது பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி. இப்பகுதியிலுள்ள சர்க்கார் சாமகுளம் ஒன்றியத்துக்கு உட்பட்டது வெள்ளமடை ஊராட்சி. இங்குள்ள அன்னூர் மெயில் ரோட்டில் ஆதிதிராவிடர் காலனி அருகே சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தார்ச்சாலை அமைக்கப்பட்டது. அப்போது, ரோட்டின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டியைக்கூட அகற்றாமல் தார்ச்சாலை அமைத்திருக்கிறார்கள் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர். இதுதான் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தி.மு.க. அரசின் இத்தகைய செயல்பாடுகளை இதுதான் திராவிடல் மாடல் ஆட்சியோ என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.