படித்து அறிவால் பெற்றது: அறிவாலய வாசலில் நின்றல்ல… சு.வெங்கடேசனுக்கு தமிழிசை பதிலடி!

படித்து அறிவால் பெற்றது: அறிவாலய வாசலில் நின்றல்ல… சு.வெங்கடேசனுக்கு தமிழிசை பதிலடி!

Share it if you like it

டுடோரியலில் படிப்பவர்கள் கூட படித்துத்தான் வெற்றிபெற்று தேர்ச்சியாகிறார்கள். உங்களைப் போல அறிவாலய வாசலில் நின்று அல்ல. ஆகவே, இறுமாப்பு வேண்டாம் என்று கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை தொகுதி எம்.பி.யான சு.வெங்கடேசனுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தரமான பதிலடி கொடுத்திருக்கிறார்.

தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்தவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன். மருத்துவரான இவர், 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டார். எனினும், தி.மு.க.வைச் சேர்ந்த கனிமொழியிடம் தோல்வியடைந்தார். இதையடுத்து, அதே ஆண்டு தெலங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2021-ம் ஆண்டு புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. தற்போது, தெலங்கானா மாநில கவர்னராகவும், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்து வரும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, “தமிழ்நாட்டு மக்கள் எங்களின் தலைமை பண்புகளை அங்கீகரிக்கவில்லை. நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சென்றிருந்தால், தற்போது மத்திய அமைச்சர்களாக இருப்போம். ஆனால், நாங்கள் எம்.பி.க்களாக தேர்வு செய்யப்படவில்லை. அதேசமயம், எங்களின் திறமைகள் வீணடிக்கப்படக் கூடாது என்கிற காரணத்தால் கவர்னர்களாக நியமிக்கின்றனர். இதில், எங்களின் தவறு எதுவும் இல்லை. மக்கள்தான் எங்களின் தலைமைப் பண்புகளை அங்கீகரித்திருக்க வேண்டும். அவர்கள்தான் நல்ல வேட்பாளர்களுக்கும், திறமையானவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த செய்தி மறுநாள் பத்திரிகைகளில் வெளியாகி இருந்தது. இதில், ஒரு ஆங்கில பத்திரிகையில் வெளியான செய்தியை கட்டிங்கை எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று பதிவிட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை மக்களவை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன், “அப்படியானால், ராஜ்பவன்கள் எல்லாம் பெயிலானவர்கள் படிக்கிற டுடோரியல் கல்லூரிகள் என்கிறீர்களா தமிழிசை அவர்களே? பரிட்சையில் பெயிலான பிறகு பிரதமர் பாஸ் போட்டு விட்டார் என்றால் அது போலிச் சான்றிதழ் இல்லையா?” என்று கேள்வி எழுப்பி நக்கலாக பதிவிட்டிருந்தார். இதற்குத்தான் தனது ட்விட்டரில் பதிலடி கொடுத்திருக்கிறார் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்.

இதையடுத்து, கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று வெளியிட்டிருக்கும் தனது ட்விட்டர் பதிவில், “ராஜ்பவன்கள் டுடோரியலாக இருப்பதாக வெங்கடேசன் சொல்கிறார். டுடோரியல் ஒன்றும் கேவலமான இடமல்ல. அதுவும் கல்வி பயிலும் புனிதமான இடம்தான். டுடோரியலில் படிப்பவர்கள்கூட படித்து அறிவாற்றல் பெற்று தேர்வாகிறார்கள். தங்களைப் போல அறிவாலய வாசலில் நின்று பெற்றது அல்ல. தேர்தல் வெற்றி மட்டுமே ஒருவருக்கு அங்கீகாரம் கிடையாது. ராஜ்பவன்கள் பயிற்சி பட்டறைகளாக இருக்கலாம். அரண்மனை வாரிசுகளை உருவாக்கும் இடமாக இல்லை என்பதில் பெருமையே. நேற்று வென்றவர்கள் நாளை தோற்கலாம். நேற்று தோற்றவர்கள் நாளை வெல்லலாம். ஆகவே, இறுமாப்பு வேண்டாம். ஆளுநர் ஆவதற்கும் பல சிறப்புத் தகுதிகள் வேண்டும். அதைப் போன்ற தகுதிகளை தாங்கள் பெறப் போவதில்லை. மறுபடியும் சொல்கிறேன், இறுமாப்பு வேண்டாம்” என்று சு.வெங்கடேசனுக்கு தரமான பதிலடி கொடுத்திருக்கிறார்.


Share it if you like it