இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி…தோழர்கள் அதிர்ச்சி!

இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி…தோழர்கள் அதிர்ச்சி!

Share it if you like it

மூன்று கட்சிகள் தேசிய கட்சி எனும் அந்தஸ்தை இழப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆகியவை தேசிய கட்சி எனும் அந்தஸ்தை தற்போது இழந்துள்ளன. அதே வேளையில், ஆம் ஆத்மி கட்சியை தேசிய கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

இதனிடையே, பா.ஜ.க. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பகுஜன் சமாஜ், தேசிய மக்களின் கட்சி மற்றும் ஆம் ஆத்மி ஆகிய 6 கட்சிகள் மட்டுமே தற்போது தேசிய கட்சிகளாக உள்ளன. குறைந்தபட்சம் 4 மாநிலங்களில் 6 சதவீத வாக்குகள் மற்றும் குறைந்தபட்சம் 4 மக்களவை உறுப்பினர்களை பெற்ற ஒரு கட்சி தேசிய கட்சியாக அங்கீகாரம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை தொடர்ந்து அருணன், சுந்தரவள்ளி, கனகராஜ் போன்ற தோழர்கள் என்ன சொல்ல போகிறார்கள்? என நெட்டிசன்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.


Share it if you like it