கம்யூனிஸ்ட் கட்சியில் பட்டியல் சமூக மக்கள் அவமதிப்பு.
மத்திய அரசு, மோடி, தமிழக பா.ஜ.க தலைவர்களை மிக கடுமையாக விமர்சனம் செய்வது, சீனாவிற்கு ஆதரவாகவும், இந்தியாவின் சாதனைகளை மட்டம் தட்டும் நோக்கில் அவதூறு கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை மட்டுமே கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர்கள் இன்று வரை செய்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.
சமூக நீதி, சம உரிமை, சமத்துவம், சகோதரத்துவம், என்று ஊருக்கு பாடம் நடத்தி வரும் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் தங்கள் கட்சியில் சிறுபான்மையினருக்கோ, பட்டியல் சமூகத்தை சேர்ந்த மக்களுக்கோ, உரிய பிரதிநிதித்துவத்தை வழங்கினார்கள் என்றால் மில்லியன் டாலர் கேள்வி.
பட்டியல் இனத்தைச் சேர்ந்த 12 பேர், மலைவாழ் மக்கள் எட்டுப் பேர், ஓ.பி.சி-யில் 28.
பட்டியல் சமூகம், பழங்குடியின சமூகம், சிறுபான்மை சமூகம், என அனைவருக்கும் உரிய முக்கியத்துவத்தை வழங்கி, அவர்களை அமைச்சர்களாக்கி அழகு பார்க்கும் பா.ஐ.க-வையும், பாரதப் பிரதமர் மோடியையும் இன்று வரை விமர்சனம் செய்து வருகின்றனர்.
இச்சமயத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர் ஒருவர்,சென்ட்ரல் கமிட்டிக்கோ, பொலிட் பீரோவிற்கோ, தாழ்த்தப்பட்ட மக்களை கொண்டு வரக்கூடாது அவர்களுக்கு தலைமை பண்பு கிடையாது என்று அவர் பேசிய காணொளி ஒன்று தற்சமயம் வைரலாகும்.