ராஜஸ்தான் முதல்வர் முன்பாக காங்கிரஸை மறைமுகமாக சாடிய பிரதமர்!

ராஜஸ்தான் முதல்வர் முன்பாக காங்கிரஸை மறைமுகமாக சாடிய பிரதமர்!

Share it if you like it

எதிர்மறை எண்ணம் கொண்டவர்களால் நாட்டில் நடக்கும் நல்ல விஷயங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என பாரதப் பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக சாடியிருக்கிறார்.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஒன்றாக இருப்பது ராஜஸ்தான். இம்மாநிலத்தில், பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைக்கும் விதமாக பிரதமர் மோடி சென்று இருக்கிறார். இதையடுத்து, அவர் பேசும் போது இவ்வாறு கூறினார் : “நான் இன்று ரூ.5,500 கோடிக்கும் அதிகமான உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். இந்த வளர்ச்சித் திட்டங்களைப் பெற்றுள்ள ராஜஸ்தான் மக்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது அரசானது ராஜஸ்தான் மக்களுக்கு நவீன உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.

அடிப்படை வசதிகளுடன் நவீன உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கும் போதுதான் வேகமான வளர்ச்சி சாத்தியமாகும் என்று வரலாறு நமக்கு உணர்த்துகிறது. போதுமான மருத்துவக்கல்லூரிகள் உருவாக்கப்பட்டிருந்தால், நாம் மருத்துவர்கள் பற்றாக்குறையை சந்திக்க வேண்டியது இருந்திருக்காது. எல்லா வீடுகளுக்கும் குடிநீர் வசதி செய்து தரப்பட்டிருந்தால் ரூ.3.5 லட்சம் கோடி செலவில் ஜல்ஜீவன் அமைச்சகம் ஏற்படுத்தும் தேவை இருந்திருக்காது. எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்களால் தொலைநோக்குப் பார்வையுடன் சிந்திக்க முடியாது. அவர்களுக்கு அரசியல் நலனே முக்கியம். அதிக எதிர்மறை எண்ணம் கொண்டவர்களால் நாட்டில் நடக்கும் நல்ல விஷயங்களை ஒருபோதும் பார்க்க முடியாது. அவர்கள் கலகத்தை மட்டுமே உருவாக்குவார்கள்.” இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.


Share it if you like it