சாவர்க்கரை தொடர்ந்து சத்ரபதி சிவாஜி அவமதிப்பு:  காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மகாராஷ்டிரா கொதிப்பு!

சாவர்க்கரை தொடர்ந்து சத்ரபதி சிவாஜி அவமதிப்பு: காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மகாராஷ்டிரா கொதிப்பு!

Share it if you like it

சாவர்க்கரை தொடர்ந்து சத்ரபதி சிவாஜியையும் காங்கிரஸ் கட்சி அவமதித்திருப்பதால், மகாராஷ்டிர மாநில மக்கள் கொந்தளித்துப் போய் இருக்கிறார்கள்.

மோடி சமூகத்தைப் பற்றி அவதூறாகப் பேசிய ராகுல் காந்தி, மன்னிப்புக் கேட்க நான் ஒன்றும் சாவர்க்கர் இல்லை. எனது பெயர் காந்தி என்று கூறியிருந்தார். இது மகாராஷ்டிர மாநில மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், சாவர்க்கர் பற்றி அவதூறாகப் பேசினால் பாதிப்பு நமக்குத்தான் என்று அறிவுரை கூறி, இனி சாவர்க்கரைப் பற்றிப் பேசக் கூடாது என்று கூறியிருந்தார். இதன் பிறகு, சாவர்க்கரைப் பற்றி பேசுவதை ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியினரும் நிறுத்தி விட்டனர்.

இந்த நிலையில்தான், மகாராஷ்டிர மாநிலத்தின் மற்றொரு கடவுளாகக் கருதப்படும் சத்ரபதி சிவாஜியை அவமானப்படுத்தி இருக்கிறது காங்கிரஸ் கட்சி. அதாவது, காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் ஆசிரியரான சுஜாதா ஆனந்தன் தனது டுவிட்டர் பதிவில், “சத்ரபதி சிவாஜி நிச்சயமாக சிறந்தவர். ஆனால், முகலாயர்கள் இல்லையென்றால், அவர்களுடன் போரிடவில்லை என்றால் சத்ரபதி சிவாஜி என்பவர் யாருக்கும் தெரியாமலேயே போயிருப்பார்.

சிவாஜியின் ராணுவம்கூட கொள்ளையடித்தது, பெண்களை கற்பழித்தது. இதைத்தான் அந்த நாட்களில் வெற்றி பெற்ற ராணுவங்களும் செய்தன. கல்யான் பகுதியின் முஸ்லிம் ஆளுநரின் மருமகளை பாலியல் பலாத்காரம் செய்யாததற்காகவும், தனது வீரர்கள் போரில் பெண்களுடன் ஈடுபடாமல் இருந்ததற்காகவும், சத்ரபதி சிவாஜி மகாராஜை ஒரு முட்டாள் என்று சாவர்க்கர் முத்திரை குத்தினார். பில்கிஸ் பானோவின் கற்பழிப்பாளர்கள் உங்கள் அமைச்சர்களுடன் மேடைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

உலகம் போற்றும் சத்ரபதி சிவாஜி மற்றும் அவரது ராணுவத்திற்கு எதிராக அசிங்கமான வார்த்தைகளை சுஜாதா ஆனந்தன் பயன்படுத்தி இருப்பதுதான் மகாராஷ்டிர மாநில மக்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது. இதற்கு மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சாவர்க்கரை இழிவுபடுத்திய காங்கிரஸ் கட்சி, தற்போது சத்ரபதியை சிவாஜியையும் இழிவுபடுத்துகிறது. அக்கட்சிக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று கொக்கரிக்கிறார்கள் மகாராஷ்டிர மக்கள்.


Share it if you like it