‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடனேயே மக்களை மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்து விடுகிறது’ என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அனுராக் தாக்கூர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: காங்கிரஸ் ஒருபோதும் எல்லைகளை பாதுகாக்கவில்லை. அவர்கள் ராணுவத்தை பலப்படுத்தவில்லை. இப்போது இந்தியாவின் அணு ஆயுதங்களை அழிப்பதாகப் பேசுகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியா வளர்ந்து வருவதை, காங்கிரஸ் ஏன் வெறுக்கிறது?.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடனேயே மக்களை மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்து விடுகிறது. இந்த ஆண்டு தேர்தல் வாக்குறுதியில், அவர்கள் இறந்த பிறகும் மக்களை மிரட்டி பணம் பறிப்பதைத் தொடர்வோம் என தெளிவாகக் கூறியுள்ளனர். 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் காங்கிரஸ் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. எமர்ஜென்சியை அமல்படுத்திய கட்சி காங்கிரஸ். இந்த கட்சி நாட்டுக்குத் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.