ஜார்ஜ் சோரஸ் – காங்கிரஸ் கூட்டு அம்பலம்!

ஜார்ஜ் சோரஸ் – காங்கிரஸ் கூட்டு அம்பலம்!

Share it if you like it

ஜார்ஜ் சோரஸ் நடத்தும் ஓப்பன் சொசைட்டி ஜஸ்டிஸ் இனிஷியேட்டிவ் அமைப்பில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் மகள் அம்ருத் சிங் முக்கியப் பொறுப்பில் இருப்பதும், ராகுல் காந்தியின் உறவினர் போரி நேருவும், ஜார்ஜ் சோரஸும் நண்பர்கள் என்பதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

இந்திய தொழிலதிபர் அதானி பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட்டதாக, அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம்சாட்டியது. இதைத் தொடர்ந்து, குஜராத் கலவரத்தில் பாரத பிரதமர் மோடிக்கு பங்கு இருப்பதாகக் கூறி, பிரிட்டனைச் சேர்ந்த பி.பி.சி. தொலைக்காட்சி ஆவணப்படம் வெளியிட்டது. இவை இரண்டுமே அடுத்தடுத்து நடந்த சம்பவங்களாகும். அதோடு, இவ்விரு சம்பவங்களுமே பிரதமர் மோடியை தொடர்புபடுத்துவதாகவே இருந்தன. இந்த சூழலில், மேற்கண்ட விவகாரத்தை நாடாளுமன்றத்தில் கிளப்பிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அதானியுடன் பிரதமர் மோடி விமானத்தில் பயணம் செய்யும் போட்டோவைக் காட்டி, பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

இதைத் தொடர்ந்து, அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வரரும், சர்வதேச முதலீட்டாளருமான ஜார்ஜ் சோரஸ், அதானி குழுமத்தின் வீழ்ச்சியால் இந்தியாவில் ஜனநாயக மறுமலர்ச்சி ஏற்படும் என்றும், மோடியின் சாம்ராஜ்யம் சரியும் என்றும் கூறினார். நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி அமளியை ஏற்படுத்திய அடுத்த சில தினங்களிலேயே ஜார்ஜ் சோரஸ் இப்படியொரு கருத்தைக் கூறியிருக்கிறார். ஆக, இவ்விரு சம்பவங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, காங்கிரஸ் கட்சிக்கும், ஜார்ஜ் சோரஸுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது. ஆகவேதான், இது நம் நாட்டு அரசியலை சீர்குலைக்கு நடக்கும் சதி என்பது பட்டவர்த்தனமாகத் தெரிந்தது.

இந்த நிலையில்தான், ஜார்ஜ் சோரஸுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பு இருப்பது அம்பலமாகி இருக்கிறது. அதாவது, ஜார்ஜ் சோரஸ் ‘ஓப்பன் சொசைட்டி ஜஸ்டிஸ் இனிஷியேட்டிவ்’ என்றொரு அரசு சாரா அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பு, உலகெங்கும் சமூக நீதி, ஜனநாயக நடைமுறை குறித்த ஆய்வுகளை நடத்தி வருகிறது. இந்த அமைப்பில்தான், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மகள் அம்ருத் சிங் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். இவர், பல்வேறு நாடுகளில் நிலவும் சமூக நீதி, மனித உரிமை நிலவரம் தொடர்பாக பல ஆய்வுகளை செய்திருக்கிறார். இவரது ஆய்வுகள் பெரும்பாலும் சர்ச்சையில்தான் முடிந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறம் இருக்க, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் எம்.பி.யுமான ராகுல் காந்தியின் உறவினரான போரி நேருவும், ஜார்ஜ் சோரஸும் நண்பர்கள் என்பது தற்போது தெரியவந்திருக்கிறது. இருவருமே யூத மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் இவர்களை இணைக்கும் முக்கிய புள்ளி. அந்த வகையில், அதானி குழுமத்துக்கு எதிராக ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதற்கும், ஜார்ஜ் சோரஸ் ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. பிரதமர் மோடியின் தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகிறது. சர்வதேச அளவில் பிரதமர் மோடிக்கும், நமது நாட்டுக்குமான செல்வாக்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இதை சில வெளிநாடுகளால் ஜீரணிக்க முடியவில்லை. குறிப்பாக, நமது நாட்டை ஆட்சி செய்த இங்கிலாந்தால், நமது வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆகவே, பிரதமர் மோடியை பதவியில் இருந்து இறக்க வேண்டும். நமது நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி வளர்ச்சிக்கு தடை போட வேண்டும். இந்தியாவை மீண்டும் காலனி ஆதிக்கத்துக்குள் கொண்டு வரவேண்டும் என்கிற நோக்கத்துடன், இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் சதித் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதிதான், பிரிட்டனை சேர்ந்த பி.பி.சி. நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படம்.

நாம், நன்றாக கவனித்துப் பார்த்தோமேயானால், கடந்த சில ஆண்டுகளாகவே, நமது நாட்டு பிரச்னைகள் தொடர்பாக, வெளிநாடுகளில் இருந்து குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சமூக வலைதளங்களில் நம் நாட்டுக்கு எதிராக பிரசாரம் நடத்தப்பட்டு வருவது கண்கூடு. அந்த வகையில், எதிர்வரும் லோக்சபா தேர்தலுக்கு முன்பு, ‘டூல் கிட்’ எனப்படும் சமூக வலைதள தகவல்கள் தொகுப்புகள் வாயிலாக நம் நாட்டுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் பொய் பிரசாரங்கள் அதிகளவில் வெளியிட சதி நடப்பதாக கூறப்படுகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல, அதானி மீதான ஹிண்டன் பர்க் நிறுவனத்தின் மோசடி குற்றச்சாட்டு, பி.பி.சி. ஆவணப்படம், தற்போது ஜார்ஜ் சோரஸ் கருத்து ஆகியவை உள்ளூர் கைக்கூலிகள் மூலம் அந்நிய சக்திகள் நடத்தும் சதி என்பது அம்பலமாகி இருக்கிறது.


Share it if you like it