திருவாவடுதுறை மடத்தை இழிவுப்படுத்திய ஜெயராம் ரமேஷ்: அமித்ஷா கடும் கண்டனம்!

திருவாவடுதுறை மடத்தை இழிவுப்படுத்திய ஜெயராம் ரமேஷ்: அமித்ஷா கடும் கண்டனம்!

Share it if you like it

நாடு சுதந்திரம் அடைந்தபோது செங்கோல் மூலம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததாகக் கூறப்படுவதை காங்கிரஸ் கட்சி அவமதிக்கும் நோக்கில் கருத்து தெரிவித்துள்ளது. இதற்கு, மத்திய நிதியமைச்சர் அமித்ஷா தக்க பதிலடியை கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பதிவில்,

“காங்கிரஸ் கட்சி இப்போது மற்றுமொரு வெட்கக்கேடான செயலை செய்துள்ளது. திருவாவடுதுறை ஆதீனம் ஒரு புனிதமான சைவ மடம். நாடு சுதந்திரம் அடைந்தபோது செங்கோலின் முக்கியத்துவம் குறித்து திருவாவடுதுறை மடம் தெரிவித்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி தற்போது திருவாவடுதுறை மடத்தின் வரலாற்றை போலி என்கிறது.

காங்கிரஸ் கட்சி தனது நடத்தை குறித்து சிந்திக்க வேண்டும். இந்திய பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் காங்கிரஸ் கட்சி ஏன் இந்த அளவு வெறுக்கிறது? இந்தியா சுதந்திரம் பெற்றதைக் குறிக்கும் வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த புனிதமான சைவ மடம் சார்பில் பண்டித நேருவுக்கு செங்கோல் வழங்கப்பட்டது. ஆனால், அதனை ஒரு ‘வாக்கிங் ஸ்டிக்’ என்று அருங்காட்சியகத்திற்கு கொடுத்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெயராம் ரமேஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டிருந்தார் :

“அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் ஒரு மத அமைப்பால் உருவாக்கப்பட்ட, சென்னையில் வடிவமைக்கப்பட்ட ஒரு கம்பீரமான செங்கோல் ஆகஸ்ட் 1947-இல் ஜவஹர்லால் நேருவிடம் வழங்கப்பட்டது என்பது உண்மை. ஆனால், ஆங்கிலேயர்களிடம் இருந்த அதிகாரம் இந்தியாவுக்கு மாற்றப்படும் அடையாளமாக இந்த செங்கோல் வழங்கப்பட்டதற்கான ஆதாரம் ஏதும் இல்லை. மவுன்ட்பேட்டன், ராஜாஜி, ஜவஹர்லால் நேரு ஆகியோர் அவ்வாறு விவரித்ததாக ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் எதுவும் இல்லை. செங்கோல் மூலம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததாகக் கூறப்படுவது பொய்யானது” என்று தெரிவித்திருந்தார்.


Share it if you like it