ஐ.டி. அதிகாரிகள் மீது தாக்குதல்… சட்டம் ஒழுங்கு தோல்வி… அண்ணாமலை கண்டனம்!

ஐ.டி. அதிகாரிகள் மீது தாக்குதல்… சட்டம் ஒழுங்கு தோல்வி… அண்ணாமலை கண்டனம்!

Share it if you like it

அமைச்சர் செந்தில்பாலாஜி தம்பி வீட்டில் ரெய்டு நடத்தச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் மற்றும் உறவினர்கள், நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொள்ளச் சென்றனர். இதை எதிர்பாராத அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்கின் ஆதரவாளர்கள், வருமான வரித்துறையினரை தங்கள் பணியை செய்யவிடாமல் அச்சுறுத்தியதோடு, அவர்களின் வாகனங்களையும் சேதப்படுத்தி உள்ளனர்.

தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு, அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் சூழலில், வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தி.மு.க.வினர் நடத்திய வன்முறை தாக்குதல், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தோல்வியடைந்திருப்பதை பிரதிபலிக்கும் விதமாக அமைந்திருக்கிறது. வருமான வரித்துறையினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறை, தங்கள் வருமான வரி சோதனை குறித்து தகவல் வராததால் பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள்.

வருமான வரித்துறையினர் வந்து தி.மு.க.வினருக்கு மட்டும் தெரிந்து, உடனடியாக சோதனை நடைபெறும் இடத்தில் கூட்டம் சேர்ந்தபோது, போலீஸார் விரைந்து செல்லாதது ஏன்? ஆகவே, சட்டத்திற்கு புறம்பான பரிவர்த்தனை சம்மந்தமான ஆவணங்கள், சொத்து விவரங்கள், நகை, பணம் ஆகியவற்றை பதுக்க வருமான வரித்துறை சோதனை தடுக்கப்பட்டதா? என்கிற சந்தேகம் எழுகிறது. வருமான வரித்துறையினர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக நடந்து கொண்ட தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வருமான வரித்துறையினருக்கு உரிய பாதுகாப்பு வழங்கத் தவறிய மாவட்ட எஸ்.பி. மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. சார்பில் வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.


Share it if you like it