ராகுலுக்கே டஃப் கொடுத்த  பிரியங்கா காந்தி!

ராகுலுக்கே டஃப் கொடுத்த பிரியங்கா காந்தி!

Share it if you like it

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி ராகுல் குறித்து பேசிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் வயநாடு எம்.பி.யாக இருப்பவர் ராகுல் காந்தி. இவர், தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் அண்மையில் கேரளாவிற்கு சென்று இருந்தார். அப்போது, நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி உரையாற்றும் போது இவ்வாறு கூறினார் ;

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நான் எனது வீட்டை காலி செய்தேன். அப்போது, எனது கணவர் மற்றும் என் பிள்ளைகள் எனக்கு உதவினர். ராகுல் காந்தி ( தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்பு) தனது வீட்டை காலி செய்தார். அப்போது, அவரது ரூமில் இருந்த மேஜைகள் மற்றும் பென்ச் ஆகியவற்றை வேறு இடத்திற்கு மாற்ற நான் அவருக்கு உதவினேன். அப்போதுதான், நான் நினைத்தேன். எனக்கு, எனது பிள்ளைகள் எனது கணவர் உதவினர். ஆனால், எனது அண்ணன் ராகுலுக்கு உதவ அவருக்கு பிள்ளைகள், மனைவி இல்லையே என்று நான் நினைத்தேன் என உருக்கமாக பேசியிருக்கிறார்.

ராகுல் காந்தி வீட்டில் இருக்கும் பொருட்களை வேறு இடத்திற்கு மாற்றி தர Packer And Mover Service போன்ற ஆயிரம் நிறுவனங்கள் உள்ளன. இதைவிடுத்து, அவருக்கு மனைவி இல்லையே, குழந்தையில்லையே என்று கேரளாவில் பிரியங்கா காந்தி அலறி இருக்கும் சம்பவம்தான் பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it