காங்கிரஸ் யூடியூப் சேனல் டெலிட்..!?

காங்கிரஸ் யூடியூப் சேனல் டெலிட்..!?

Share it if you like it

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் யூடியூப் தளத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவிலுள்ள அனைத்து பெரிய கட்சிகளும் சமூக வலைத்தளங்களில், தங்களது கட்சியின் அதிகாரப்பூர்வ அக்கவுன்ட்டை வைத்திருக்கின்றன. அந்த வகையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியும், யூடியூப், ட்விட்டர், ஃபேஸ்புக் உட்பட பல்வேறு இணையதள ஊடகங்களில் கணக்குகளை வைத்திருக்கிறது. இதில், Indian National Congress என்கிற பெயரில் இயங்கி வந்த காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல்தான் யூடியூப் தளத்தில் இருந்து டெலிட் ஆகி இருக்கிறது. இதை காங்கிரஸ் கட்சியே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பக்கத்தில், “எங்களின் யூடியூப் சேனல் Indian National Congress டெலிட் ஆகி இருக்கிறது. இதை நாங்கள் சரி செய்ய தொடர் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். இதற்காக கூகுள் மற்றும் யூடியூப் நிர்வாக அணியுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம். இது டெக்னிகல் கோளாறு காரணமாக ஏற்பட்டதா அல்லது ஏதேனும் சதி வேலை காரணமாக ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இதை விரைவில் சீர்செய்து மீண்டும் சேனல் இயங்கும் என்று நம்புகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் இந்த அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இந்த யூடியூப் சேனல் மூலம்தான் கட்சித் தலைவர்களின் மாநாடு, பொதுக்கூட்டம், பேரணி போன்றவற்றில் நடக்கும் உரைகளும், செய்தித் தொடர்பாளர்கள், மூத்த தலைவர்களின் செய்தியாளர் சந்திப்புகளும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தற்போது, காங்கிரஸ் கட்சியை புத்துணர்வு பெறச் செய்ய நாடு முழுவதும் பாரத் ஜோடோ என்ற பெயரில் பாதயாத்திரை அக்கட்சி நடத்த திட்டமிட்டிருக்கிறது. இந்த யாத்திரையை கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்குகிறார். இந்த சூழலில், கட்சியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் முடக்கப்பட்டிருப்பது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it