காற்றில் டிராவல் செய்த நாற்காலிகள்: கலவரத்தில்  முடிந்த காங்., கூட்டம்!

காற்றில் டிராவல் செய்த நாற்காலிகள்: கலவரத்தில் முடிந்த காங்., கூட்டம்!

Share it if you like it

துத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி கூட்டம் கைகலப்பில் முடிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் சண்முகம், ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, பேசிய சண்முகம், காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்று கூறினால் மட்டும் போதாது கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கூட்டத்தினர் மத்தியில் பேசிக் கொண்டு இருந்தார். அப்பொழுது, மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து விஜயா என்பவர் குறுக்கிட்டு மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் ஒரே வார்டில் போட்டியிட்டது அதை ஏன்? பேசி முடிக்கவில்லை. இப்படி இருந்தால் கட்சி எப்படி பலப்படும் என்று நியாயமான முறையில் முத்துவிஜயா காட்டமான வகையில் கேள்வியை எழுப்பினார். இதையடுத்து, சண்முகத்தின் ஆதரவாளரும் 34-வார்டு கவுன்சிலருமான சந்திர போஸ் வெகுண்டெழுந்தார். இதனால் முத்து விஜயா மற்றும் போஸ் ஆதரவாளர்கள் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டு அது கை கலப்பாக மாறி விட்டது. இதையடுத்து நாற்காலிகள் தூக்கி விசப்பட்டு பாதியிலேயே கூட்டம் முடிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதன் லிங்க் இதோ.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரத்தின் முன்னிலையில் அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் நாற்காலியை வீசி சண்டையிட்டு கொண்ட சம்பவம் கடந்த ஆண்டு நடைபெற்றது. இப்படி சூழலில் தான், தூத்துக்குடியில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஒருபக்கம் கட்சியை பலப்படுத்த வேண்டும் என சோனியா தலைமையிலான கட்சி தொடர்ந்து அறிக்கை மேல் அறிக்கை கொடுத்து வருகிறது. மறுபக்கம் தொண்டர்களின் அடிதடி தொடர்கதையாக இருந்து வருகிறது. இப்படி இருந்தால் கட்சி எப்படி உருப்படும் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it