முதல்வராக மாறிய ஜோதிமணி… கலாய்க்கும் நெட்டிசன்கள்!

முதல்வராக மாறிய ஜோதிமணி… கலாய்க்கும் நெட்டிசன்கள்!

Share it if you like it

தமிழக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, முதல்வர் ஸ்டாலினை மிஞ்சி விட்டாரே என்பதுதான் சமூக வலைத்தளங்களில் லேட்டஸ்ட் ட்ரெண்டிங்காகி வருகிறது.

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜோதிமணி. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், தற்போது கரூர் நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி.யாக இருந்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருந்துவரும் இவர், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தொடர்பான விவகாரங்களை விட, தனது செயல்பாடுகள் பற்றி பெருமையாக பதிவுகளை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்த சூழலில், மோடி சமுதாயத்தைப் பற்றி அவதூறாகப் பேசிய வழக்கில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இதனால், அவரது வயநாடு தொகுதி எம்.பி. பதவியும் பறிபோனது.

இதையடுத்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னையில் போராட்டம் நடந்தது. இதில் பேசிய ஜோதிமணி, தப்பும் தவறுமாக உளறிக் கொட்டினார். ஜோதிமணி பேசுகையில், “தலைவர் என்பதை நிரூபிக்கும் வகையில், காந்தி குடும்பத்தின் தலைமகன் என்பதை நிரூபிக்கும் வகையில், பிரிட்டிஷாரின் பீரங்கி படையை எதிர்த்து வன்முறை இல்லாமல், ஆயுதம் இல்லாமல், அஹிம்சை இல்லாமல் (?!) போராடிய குடும்பத்தின் தலைவர் என்கிற தகுதியில், ஒரு துளிகூட அச்சமில்லாமல், தைரியம் இல்லாமல் (?!) அந்தத் தீர்ப்பை எதிர்கொண்டார்” என்று கூறினார். அதாவது, அஹிம்சை இல்லாமல் என்றும், தைரியம் இல்லாமல் என்றும் ஜோதிமணி பேசியதுதான் நகைப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

தமிழக முதல்வராக இருக்கும் ஸ்டாலின்தான் இதுவரை இப்படி மாற்றி மாற்றி தவறாக பேசிவந்தார். உதாரணமாக, மதில் பூனையாக என்பதற்கு பதில் பூனை மேல் மதிலாக என்றும், யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பதற்கு பதிலாக யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே என்று உளறிக் கொட்டி வருகிறார். அந்த வரிசையில் தற்போது காங்கிரஸ் எம்.பி.யாக ஜோதிமணியும் சேர்ந்து விட்டார் என்று நெட்டிசன்கள் கேலி, கிண்டல் செய்து வருகின்றனர்.


Share it if you like it