ஆட்சி அதிகாரத்திற்காக உள்நாட்டு  பெரு முதலாளிகளை பலி கொடுக்க தயாராகும் காங்கிரஸ் – அத்தியாயம் இரண்டு !

ஆட்சி அதிகாரத்திற்காக உள்நாட்டு பெரு முதலாளிகளை பலி கொடுக்க தயாராகும் காங்கிரஸ் – அத்தியாயம் இரண்டு !

Share it if you like it

பாரதத்தின் பெரும் முதலாளிகளில் முக்கியமானவரும் பாரதத்தின் பொருளாதார பங்களிப்பில் வேகமாக வளர்ந்து வருபவருமான அதானி என்பவரை குறிவைத்து தான் சமீப காலமாக உள்நாட்டு சதிகளும் அயல்நாட்டு சதிகளும் அதிக அளவில் அரங்கேறி வருகிறது. இதில் இவர்கள் குறிப்பிடும் அதானி பாஜகவின் மோடி அரசுக்கும் கட்சிக்கும் மிகவும் நெருக்கமாக விமர்சிக்கப்படுகிறார். குறிப்பாக மோடி எடுக்கும் தொழில் முடிவுகள் கொள்கை முடிவுகள் எல்லாமே அதானிக்கும் அவரது நிறுவனத்திற்கும் சாதகமாகவே இருக்கிறது என்று கூட பல்வேறு மட்டங்களில் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அதன் அடிப்படையில் தொடர்ச்சியாக அதானி இந்திய விரோதிகளாலும் வெளிநாட்டு சதிகாரர்களாகவும் தொடர்ந்து குறிவைக்கப்படுவது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகி வருகிறது.

ராஜ்ஜிய பரிபாலன் அடிப்படையில் தேசத்திற்கு ஆதரவாக நிலைப்பாடு எடுக்கும் போது அவர்கள் சில சங்கடங்களையும் எதிர்கொள்கிறார்கள். தேசத்திற்கு எதிரான சூழல்கள் வரும்போது அதன் காரணமாக சில இழப்புகளையும் எதிர்கொள்கிறார்கள். ஆனால் எந்த நிலையிலும் சொந்த தேசத்தை அடகு வைத்து தங்களின் தனிப்பட்ட லாபத்தை பார்க்கும் ஈன செய்கையை இந்த பெரும் முதலாளிகள் இதுவரையில் செய்ததில்லை . அந்த உயரிய மாண்பிற்கு அடையாளமாக தான் பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் கூட தனியாரின் பங்களிப்பை அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு அவர்களின் பங்களிப்போடு பாரத தேசத்தின் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியும் முன்மொழிந்திருக்கிறது . இதன் மூலம் மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டம் தனியார் பங்களிப்போடு இன்னும் பலமாக வளர்க்கப்படுகிறது. மருத்துவம் அரசும் தனியார் துறையும் இணைந்து கூட்டுப் பொருளாதாரமாக தேசத்தின் பொருளாதாரத்தை வளர்த்தெடுக்கிறது. அந்த வகையில் ஆட்சியாளர்களும் பெரும் முதலாளிகளும் இணைந்து மக்களின் நலனுக்கும் தேசத்தின் வழத்திற்கும் இணைந்த கைகளாக பாடுபடுகிறார்கள்.

பாரத தேசத்திற்கு ஆதரவாக பல்வேறு விவகாரங்களில் ராஜ்ஜிய பரிபாலான நடவடிக்கைகளுக்கு உதவியாக இது போன்ற பெரும் முதலாளிகள் சில அதிரடி நடவடிக்கைகளையும் எடுப்பதுண்டு. அதன் காரணமாக சில நூறுகள் தொடங்கி ஆயிரம் கோடிகள் வரை அவர்கள் இழப்பீடுகளை ஏற்கவும் தயாராக இருக்கிறார்கள். ஆனால் தங்களின் தேசத்திற்காக தாங்கள் எதையும் செய்ய தயார் என்று போட்டி நிறுவனங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் சொல்வதன் மூலம் தங்களின் தேசத்தை பலப்படுத்த முடியும் என்று அசைக்க முடியாமல் நம்புகிறார்கள். தனது வாக்கு வங்கி அரசியலுக்காக ஆட்சி அதிகாரத்திற்காக தேசத்தின் நலன் வளர்ச்சி பாதுகாப்பு தேசிய இறையாண்மை வரை பலி கொடுத்து பழகிய காங்கிரஸ் கட்சிக்கும் அதன் தலைமை குடும்பத்திற்கும் அதானி போன்ற பெரு முதலாளிகள் அருமை தெரிய வாய்ப்பில்லை.

அதானி போன்ற பெரு முதலாளிகளின் அதிரடியான நடவடிக்கைகள் அறிவிப்புகள் ராஜ்ய ரீதியாக எத்தனையோ விஷயங்களில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உருவாக்கியதுண்டு. இவர்களின் நடவடிக்கைகள் எத்தனையோ விவகாரங்களில் சர்வதேச அளவில் ராஜ்ஜிய முகங்களையே மாற்றி அமைத்ததும் உண்டு. குறிப்பாக அக்னி வீரன் என்னும் குறுகிய கால இராணுவ சேவை கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டபோது இதில் பணியாற்றி குறுகிய விற்பனை கால சேவை முடித்து வரும் அக்னி வீரர்களுக்கு தங்களது நிறுவனங்களில் 10% இட ஒதுக்கீடு உண்டு என்று பல்வேறு முன்னணி கார்ப்பரேட் முதலாளிகள் அறிவித்தவுடன் அந்த அக்னி வீரன் திட்டத்திற்கு பொதுமக்களிடமும் இளைய தலைமுறை இடமும் வரவேற்பு பன் மடங்கு கூடியது. தேசத்திற்கான பாதுகாப்பு அது சார்ந்த விஷயங்களில் ஈடுபடும் இளைஞர்களுக்கு உரிய கௌரவம் அந்தஸ்து வழங்குவதன் மூலம் பெறு முதலாளிகள் அவர்களின் தேசியத்தை வெளிப்படுத்தினார்கள். ஜெய் ஹிந்த் என்ற தேசிய கோஷத்தை கூட கட்சி அரசியல் செய்து இழிவு படுத்தும் காங்கிரஸ் கட்சியின் இளவரசருக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எந்த அதானியை மோடியின் நண்பன் மோடியை அதானியின் நலன் விரும்பி என்று குறிப்பிடுவார்கள். இன்று அந்த அதானியின் சொத்துக்களை எல்லாம் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பறிமுதல் செய்வோம் என்று காங்கிரஸ் கட்சி தலைவரும் இளவரசருமான ராகுல் குறிப்பிடுகிறார். இதன் மூலம் ஆர்எஸ்எஸ் பா‌ஜக மற்றும் மோடி அமீத் ஷா ஆதரவாளர்கள் மற்றும் அவர்களின் சொத்துக்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பாதுகாப்பு இருக்காது என்று சொல்கிறார். பெரு முதலாளியான அதானிக்கே இந்த அச்சுறுத்தல் வருமானால் இங்கு சாதாரண தேசிய வாதிகள் மற்றும் ஆன்மீக வாதிகள் நிலை என்ன ஆகும்? ஆர்எஸ்எஸ் பா‌ஜக தொண்டர்கள் நிர்வாகிகள் நிலை எப்படி இருக்கும் என்று நீங்களே யோசித்துப் பாருங்கள்.

பத்து ஆண்டுகள் ஆட்சியில் இல்லை. தொடர் தோல்வி மக்கள் அதிருப்தியும் இருக்கும் போதே காங்கிரஸ் கட்சி இவ்வளவு தூரம் தேச நலன் வளர்ச்சிக்கு எதிராக கட்சி இளவரசரை பேச வைக்கும் எனில் ஆட்சிக்கு வந்தால் நாடு மக்களின் நிலை என்னவாக இருக்கும்?

வெளிநாடுகளில் இருக்கும் சதிகாரர்களுக்கும் பாரதத்தில் இருக்கும் போட்டி கம்பெனிகளுக்கும் அதானி மீது வன்மம் இருக்கலாம். அவரின் வளர்ச்சியை தடுத்து நிறுத்துவதன் மூலம் இந்த தேசத்தின் வளர்ச்சியை அவரது நிறுவனத்தின் வளர்ச்சியை முடக்கிவிடலாம் என்ற கெடுமதி கூட இருக்கலாம். ஆனால் அரை நூற்றாண்டுகள் இந்த தேசத்தை ஆண்ட ஒரு கட்சி சுதந்திரத்திற்கு காரணம் நாங்கள் தான் என்று மார்தட்டிக்கொள்ளும் ஒரு தேசியக் கட்சியின் இளவரசர் நாடாளுமன்ற உறுப்பினர் அந்த பெரும் முதலாளியை குறிவைத்து நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அவரின் சொத்துக்களை அபகரித்து ஏழை மக்களுக்கு பகிர்ந்து அளிப்போம் என்று சொல்வது காங்கிரஸ் கட்சியின் அராஜகத்தையும் அரச பயங்கரவாத முகத்தையும் வெளிப்படுத்துகிறது.

இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு கப்பம் கட்ட தயார் இல்லாத அல்லது பாஜக கட்சி ஆர் எஸ் எஸ் உள்ளிட்ட அமைப்புகளுக்கு இணக்கமாக இருக்கும் பெரும் முதலாளிகளை இந்தியாவில் வாழ விடமாட்டோம் என்று காங்கிரஸ் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவே அர்த்தம் . மேலும் பாரதத்தில் வெற்றிகரமாக யாரேனும் தொழில் நடத்தினாலோ? அதன் மூலம் லாபகரமான தொழில் இயக்கம் இருந்தாலும் தேசத்திற்கு பெரிய அளவில் அவர்கள் பங்களிப்பு வழங்கினாலோ? அவர்களை நிச்சயம் நிம்மதியாக வாழவும் விடமாட்டோம். அவர்களின் வியாபார வர்த்தக நிறுவனங்கள் அவர்களின் வசம் இருக்கவும் விடமாட்டோம். அனைத்தையும் அரசு அதிகாரத்தை பயன்படுத்தி அபகரித்துக் கொள்வோம் என்று ராகுல் நாட்டு மக்களை எச்சரிப்பதாகவும் மிரட்டுவதாகவும் தான் அர்த்தம்.

பாரதத்தின் பொருளாதாரத்தில் பங்களிப்பு வழங்கி தானும் வளர்ந்து தேசத்தின் வளர்ச்சிக்கும் பங்களிப்பு வரும் வழங்கும் அதானி உள்ளிட்ட பெரும் முதலாளிகள் மீது உள்நாட்டு துரோகிகளுக்கும் வெளிநாட்டு சதிகாரர்களுக்கும் வன்மம் வருவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம் . ஆனால் அவர்களின் எண்ணத்தை உள்ளிருந்து செயல் படுத்தும் வகையில் ஒரு தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேசுவது தேச விரோத அடையாளமே. எதிர்காலத்தில் நாங்கள் ஆட்சிக்கு அதிகாரத்திற்கு வரும்போது அதானியின் சொத்துக்களை பறிமுதல் செய்து காட்டுவோம் என்று சொல்வார் ஆனால் அந்த உள்நாட்டு துரோகிகளுக்கும் அந்நிய சதிகாரர்களுக்கும் முகமாக அரசியல் முகமாக அவரும் அவரது கட்சியும் செயல்படுகிறது என்றே அர்த்தம் . அவ்வகையில் அதானியின் சொத்துக்களை பறித்து நாட்டில் உள்ள ஏழைகளுக்கு பகிர்ந்து அளிப்பேன் என்ற தனது அறிக்கையின் மூலம் காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தியும் இந்த தேசத்திற்கும் தேசத்தின் வளர்ச்சிக்கும் எதிரானவர்கள் என்பதை நிரூபித்திருக்கிறார். மேலும் இந்த தேசத்தை உள்ளிருந்து அழிக்கவும் வெளியிலிருந்து சிதைக்கவும் நினைக்கும் அத்தனை பேருக்கும் காங்கிரஸ் கட்சியும் அதன் கொள்கை முடிவுகளும் முழு உடந்தையாக இருக்கும் என்பதையும் அவர் நிரூபித்திருக்கிறார்.


Share it if you like it