நாராயணசாமிக்கு அதிர்ச்சியை கொடுத்த காங்கிரஸ்..!

நாராயணசாமிக்கு அதிர்ச்சியை கொடுத்த காங்கிரஸ்..!

Share it if you like it

புதுவை யூனியன் பிரதேசத்தில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், ராகுல் காந்தி. அண்மையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்பொழுது அக்கட்சி ஏற்பாடு செய்த, கூட்டம் ஒன்றில் ராகுல் கலந்து கொண்டு., உரையாற்றி கொண்டு இருந்தார். திடீர் என்று அக்கூட்டத்தில் இருந்த ”பாட்டி ஒருவர் புதுவை முதல்வர் மீது., சரமாரியாக புகார் தெரிவித்தார்.

புயல் பாதிப்பு ஏற்பட்ட பொழுது.,  முதல்வர் எங்களை ஒரு தடவை, கூட பார்க்க வரவில்லை என்று, வேதனையுடன் ராகுலிடம் புகார் தெரிவித்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத நாராயணசாமி அந்தப் பாட்டி தனக்கு நன்றி தெரிவித்ததாக மிகப் பெரிய கப்ஸா கதையை கூறி ராகுலை நம்ப வைத்தார்.

ராகுலை ஏமாற்றிய புதுவை முதல்வர் என்று மீம்ஸ்கள், காணொளிகள், சமூக வலைத்தளங்களில் வைரலாகி., ராகுல் காந்திக்கு மிகப் பெரிய அவப்பெயரை ஏற்படுத்தி கொடுத்தது என்பது அனைவரும் அறிந்ததே.

புதுவை யூனியன் பிரதேசத்தில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி தற்பொழுது கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமியின், பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம் பெறாமல் இருப்பது பெரும் பரபரப்பை புதுவையில் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it