ஸ்ரீ ராமன் அவதரித்த நன்னாள், ராம நவமி திருநாளாக வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் ராம நவமி விழா நாளை கொண்டாடப்படுகிறது. மகிமை ராம நவமி அன்று அதிகாலை எழுந்து நீராடி, வீட்டில் பூஜை அறையை சுத்தம் செய்து, அலங்கரித்து, பட்டாபிஷேக ராமர் படத்துக்குப் பூக்களை சூடி நைவேத்தியங்களைப் படைத்து, ஸ்ரீ ராம நாமம் சொல்லி பூஜிக்க வேண்டும்.
பெரிய அளவில் நைவேத்தியம் படைக்கவேண்டும் என்பதில்லை. ராமர் பட்டாபிஷேக படத்தின் முன்பாக வாழைப்பழம், பால் போன்ற எளிய பொருட்களை அர்ப்பணித்தும், ஸ்ரீ ராம நாமம் சொல்லியும் ஸ்ரீ ராமனை வணங்கி அருள் பெறலாம்.
இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் டிஎஸ்பி பிரகாஷ் சோய் தலைமையில், ஸ்ரீ ராம நவமி ஊர்வலம் செல்லும் வழியில் உள்ள அனைத்து வீடுகளின் மேற்கூரைகளிளும் ஆளில்லா விமானங்கள் மூலம் நேற்று ஆய்வு செய்யப்பட்டன. மேலும் ஹிந்த்பிரி மற்றும் டெய்லி மார்க்கெட் காவல் நிலையப் பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் மேற்கூரை ஆய்வு செய்யப்பட்டது.
ஊர்வலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. ஊர்வலத்தின் போது கல் வீச்சு நடக்காமல் இருக்க, ஊர்வலம் செல்லும் பாதையில் உள்ள அனைத்து வீடுகளிலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், ராமநவமி ஊர்வலத்தை கலைக்க சில வீடுகளின் மேற்கூரையில் செங்கற்கள் மற்றும் கற்கள் காணப்பட்டதாக ட்ரோன் மூலம் கண்டுபிடித்துள்ளனர். உடனடியாக அவற்றை அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதுதவிர ஊர்வலம் செல்லும் பாதை மற்றும் பல்வேறு சந்திப்புகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தபடுவதாகவும் தெரிவித்தனர்.
ராமநவமி ஊர்வலத்தை கண்காணிக்க தற்காலிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியை மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது என்று டிஎஸ்பி பிரகாஷ் சோய் தெரிவித்தார். இவை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும். ஊர்வலம் சிசிடிவி மூலம் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும். சமூக விரோதிகள் யாரும் தப்பிக்க மாட்டார்கள். சிசிடிவி மூலம் குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
https://x.com/JaiRam92739628/status/1780178514769297885