சனாதனம் குறித்த சர்ச்சை பேச்சு : உச்சநீதிமன்றம் நோட்டீஸ் !

சனாதனம் குறித்த சர்ச்சை பேச்சு : உச்சநீதிமன்றம் நோட்டீஸ் !

Share it if you like it

சனாதனம் குறித்த சர்ச்சை பேச்சுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் தொடரப்பட்ட வழக்கை ஒரே வழக்காக தொகுத்து விசாரிக்க வேண்டும் எனக்கூறி தமிழக அமைச்சர் உதயநிதி தாக்கல் செய்த மனு குறித்து பதிலளிக்கும்படி பல்வேறு மாநில அரசுகளுக்கும், அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்களுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில், சென்னையில் நடந்த மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி, ‛மலேரியா, டெங்கு நோய்கள் போல், சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் ‘ என்றார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. உதயநிதியின் பேச்சுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே, உதயநிதி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‛‛ அனைத்து மாநிலங்களிலும் தொடுக்கப்பட்ட வழக்குகளை தொகுத்து ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும்” எனக்கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, உதயநிதியின் கோரிக்கை குறித்து பதிலளிக்கும்படி பல்வேறு மாநில அரசுகள் மற்றும் அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மேலும், முந்தைய விசாரணையின் போது, சட்டப்பிரிவு 32ன் கீழ் உதயநிதி மனு தாக்கல் செய்ததற்கு ஆட்சேபனை தெரிவித்த நீதிபதிகள், சிஆர்பிசி 406( வழக்குகளை மாற்றும் உச்சநீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரம் குறித்த பிரிவு) ன் கீழ் மனு தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தி இருந்தனர். இதன்படி, உதயநிதி தரப்பில் திருத்தம் செய்யப்பட்ட மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.


Share it if you like it