ஒமிக்ரானில் சிக்கிய தென் ஆப்பிரிக்கா – உதவ தயாராக இருக்கும் இந்தியா!

ஒமிக்ரானில் சிக்கிய தென் ஆப்பிரிக்கா – உதவ தயாராக இருக்கும் இந்தியா!

Share it if you like it

கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்கிரான் என்ற வைரஸ் தென் ஆப்பிரிக்கா நாட்டில், தற்போது அதிவேகமாக பரவி பலமக்கள் இதனால் பாதிக்கப்பட்டுளனர். இதன் காரணமாக ஆப்பிரிக்காவில் இருந்து வெளி நாடுகளுக்கு செல்லும் விமான சேவைகளை உலக நாடுகள் பலவும் தடை செய்தன. உலக நாடுகளின் இச்செயலுக்கு தென் ஆப்பிரிக்கா தரப்பிலிருந்து பலரும் வருத்தம் தெரிவித்தனர்.


இந்நிலையில் இந்தியாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் பலரும் எதிர்பார்த்து வந்தனர். அவர்களின் எதிர்பார்பை பூர்த்தி செய்யும் விதமாக இந்தியா பாதிக்கப்பட்ட தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு உதவி செய்ய தயாராக உள்ளதாகவும் இந்திய தடுப்பூசிகளை பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட நாட்டை தனிமைப்படுத்தாமல் உதவிக்கரம் நீட்டும் இந்தியாவின் இத்தகு நடவடிக்கைக்கு சமுக வலைதளங்களில் பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

Share it if you like it