சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியது: உறுதிப்படுத்தியது அமெரிக்கா!

சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியது: உறுதிப்படுத்தியது அமெரிக்கா!

Share it if you like it

சீனாவின் வூகான் மாகாணத்திலுள்ள ஆய்வகத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாகவே கசிவு ஏற்பட்டு கொரோனா வைரஸ் பரவியது என்று அமெரிக்க எரிசக்தித்துறை உறுதிப்படுத்தி இருக்கிறது.

கொரோனா… இந்தப் பெயரை கேட்டாலே குலையே நடுங்கும். இந்த கொடிய வைரஸ் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பரில் சீனாவில் முதன் முதலில் பரவத் தொடங்கியது. பின்னர், படிப்படியாக அசுர வேகத்தில் உலகம் முழுவதும் பரவி, பெரும் உயிரிழப்புகளையும், கடுமையான பொருளாதார நெருக்கடியையும் ஏற்படுத்தியது. லாக்டவுனால் உலகமே முடங்கிக் கிடந்ததால், அத்தியாவசியப் பொருட்கள் கூட கிடைக்காமல் மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளானார்கள். இந்த கொடிய வைரஸ் சீனாவின் வூகான் மாகாணத்திலுள்ள ஆய்வகத்தில் இருந்துதான் பரவியதாக அமெரிக்காவின் உளவு அமைப்பு அப்போதே குற்றம்சாட்டியது. ஆனால், அது எப்படி பரவியது என்பது குறித்து குறிப்பிடப்படவில்லை.

இந்த நிலையில்தான், சீனாவிலுள்ள ஆய்வகத்தில் ஏற்பட்ட விபத்தின் மூலம் கொரோனா வைரஸ் பரவியதாக அமெரிக்காவின் எரிசக்தித் துறை கூறியிருக்கிறது. அமெரிக்க தேசிய ஆய்வகங்களின் வலையமைப்பையும், சில மேம்பட்ட உயிரியல் ஆராய்ச்சிகளையும் அமெரிக்க எரிசக்தித் துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா வைரஸ் எப்படி பரவியது என்பது குறித்து, அமெரிக்க எரிசக்தித் துறையின் ரகசிய ஆயவு மேற்கொண்டது. இந்த புலனாய்வு அறிக்கை சமீபத்தில் வெள்ளை மாளிகை மற்றும் நாடாளுமன்றத்தின் முக்கிய உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த ஆய்வறிக்கையில்தான் சீனாவின் ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் கசிந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது, சீனாவின் வூஹான் மாகாணத்தில் ஏராளமஆன ஆய்வகங்கள் இருக்கின்றன. இந்த ஆய்வகங்களில் வஹ்ஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி, சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் மற்றும் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் உயிரியல் ஆய்வு மையம் ஆகியவையும் அடங்கும். அந்த வகையில், இங்குள்ள ஒரு ஆய்வகத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக, கொரோனை வைரஸ் கசிந்து, வூஹானில் உள்ள கடல் உணவு சந்தையில் முதலில் பாதிப்பை ஏற்படுத்தியது என்பது தெரியவந்திருக்கிறது. எனினும், உலக சுகாதார அமைப்பின் விசாரணைகளுக்கு வரம்புகளை விதித்திருக்கும் சீனா, வழக்கம்போல தனது ஆய்வகங்களில் இருந்து வைரஸ் கசிந்தது என்பதை மறுத்திருக்கிறது. மேலும், சீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸ் தோன்றியதாக தெரிவித்திருக்கிறது.


Share it if you like it