ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு எதிராக போராட முயற்சி… தடுத்த போலீஸுக்கு பளார்… மதுரை நந்தினி கைது!

ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு எதிராக போராட முயற்சி… தடுத்த போலீஸுக்கு பளார்… மதுரை நந்தினி கைது!

Share it if you like it

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடத்தில் ஈடுபட முயன்ற மதுரை நந்தினி, அவரது சகோதரி நிரஞ்சனா ஆகியோரை போலீஸார் தடுத்து நிறுத்தனர். அப்போது, பெண் போலீஸை கன்னத்தில் அறைந்த காரணத்தால் நந்தினி, நிரஞ்சனாவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

ஊட்டியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் 3 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. இம்மாநாட்டில் இன்று அகில இந்திய தலைவர் மோகன் பாகவத் கலந்துகொள்கிறார். இந்த சூழலில், ஆர்.எஸ்.எஸ். மாநாட்டுக்கு எதிராகவும், மோகன் பாகவத்துக்கு எதிராகவும் மதுரையைச் சேர்ந்த நந்தினி, அவரது சகோதரி நிரஞ்சனா ஆகியோர் ஊட்டிக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்திருந்தனர். அதன்படி, இருவரும் மதுரையில் இருந்து கோவைக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தனர். இத்தகவல் கோவை மாவட்ட போலீஸாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து, இத்தகவல் சூலூர் போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டு, இருவரையும் வழியிலேயே மடக்கி பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. து. அதன்படி, சூலூர் போலீஸ் நிலையம் முன்பு தடுப்புகள் அமைத்து, அந்த வழியாக வந்த அனைத்து பஸ்களையும் போலீஸார் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது மதுரையில் இருந்து கோவைக்கு ஒரு பஸ் வந்தது. அந்த பஸ்சில் ஏறி போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது நந்தினி, நிரஞ்சனா ஆகியோர் பஸ்ஸில் இருப்பதைக் கண்டு பெண் போலீஸார் உதவியுடன் அவர்களை கீழே இறக்கினர்.

தொடர்ந்து, 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்குள் அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது, நந்தினியும், நிரஞ்சனாவும் பணியில் இருந்த பெண் போலீஸாரை தாக்கியதாக கூறப்படுகிறது. அதாவது ஒரு பெண் போலீஸை இருவரும் சேர்ந்து கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார் மேலும் சில போலீஸாரை வரவழைத்து, நந்தினியையும், நிரஞ்சனாவையும் சூலூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், இருவரையும் கைது செய்து, மத்திய சிறையில் அடைத்தனர். இருவரும் மத்திய பா.ஜ.க.வுக்கு எதிராவும், மோடிக்கு எதிராகவும் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it