மாட்டு சாணம், கோமியம்: சத்தீஸ்கர் அரசு அதிரடி!

மாட்டு சாணம், கோமியம்: சத்தீஸ்கர் அரசு அதிரடி!

Share it if you like it

பசுக்களின் கழிவுகளை ஆக்கபூர்வமான பணிகளுக்கு பயன்படுத்தி அதிக லாபத்தை கேரள மற்றும் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள் பெற்று வருகின்றன.

மாட்டு சாணம், கோமியம், என்றால் தமிழகத்தில் உள்ள அறிவாலய ஊடகங்கள் முதல் சில்லறை வாங்கும் போராளிகள் வரை கேலி, கிண்டல் செய்து வருகின்றனர். மேலும், இது பெரியார் மண், பகுத்தறிவு மண் என்று தி.மு.க.வினர் கூறி வருகின்றனர். ஆனால், இதே விடியல் அரசு தான் ஒட்டு மொத்த தமிழகத்தையும், மதுவிற்கு அடிமையாக்கி வைத்து இருக்கின்றன என்பது கசப்பான உண்மை.

இப்படிப்பட்ட சூழலில் தான், கேரள அரசு தனக்கு சொந்தமான ஆயுர்வேத நிறுவனங்கள் மூலம் நெய், வெண்ணெய், மாட்டு சாணம் மற்றும் கோமியம் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் அதிக லாபத்தை பெற்று வருகின்றன. தி.மு.க.வை விட அதிக பகுத்தறிவு பேசும் கம்யூனிஸ்ட்கள் கூட, ஆக்கபூர்வமாக சிந்தித்து வேகமாக முன்னேறி வருகின்றனர். மனநல நோய்கள், மஞ்சள் காமாலை, காய்ச்சல், கை-கால் வலிப்பு உள்ளிட்ட நோய்கள் “பஞ்சகவ்யா க்ருத” மருந்தின் மூலம் நல்ல பலன் கிடைப்பதாக சொல்லப்படுகிறது.

அந்த வகையில், சத்தீஸ்கர் அரசு சில அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து இருக்கின்றன. அதாவது, ’கோதன் நியாய்’ திட்டத்தின் கீழ் பசுவின் சிறுநீரை லிட்டருக்கு 4 ரூபாய்க்கு வாங்க அம்மாநில அரசு முடிவு எடுத்து இருக்கின்றன. இதன் மூலம், கால்நடை வளர்ப்போர், இயற்கை விவசாயிகள் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் சத்தீஸ்கர் அரசு தீர்மானித்து இருக்கின்றன. அதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு கால்நடை காப்பகங்கள் வாயிலாக பசுவின் சிறுநீர் கொள்முதல் செய்ய ஆவணம் செய்யப்பட்டு இருக்கின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளில், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம், 20 லட்சம் குவிண்டால்களுக்கு மேல் மண்புழு உரம், சூப்பர் கம்போஸ்ட், சூப்பர் பிளஸ் உரம் ஆகியவை மாட்டு சாணத்தில் இருந்து தயாரிக்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, 143 கோடி ரூபாய் வருமானம் அரசிற்கு கிடைத்து இருக்கின்றன. மேலும், இத்திட்டத்தின் கீழ், 150 கோடி ரூபாய்க்கு மேல் மாட்டு சாணம் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன.

பசுவின் சிறுநீர், மாட்டு சாணம் என்று பார்க்காமல் கேரளா மற்றும் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள் வேகமாக முன்னேறி வருகின்றன. ஆனால், விடியல் முதல்வர் தமிழ் குரங்கு, தமிழனே மதுக்கடையில் போய் நீ உறங்கு உளறி கொட்டி வருவதாக நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

/https://www.indiatoday.in/india/story/chhattisgarh-govt-cow-urine-godhan-nyay-yojana-1977141-2022-07-18

மாட்டுசாணம் வாங்கும் அரசு
மாட்டுச் சாண சூட்கேசுடன் சத்தீஸ்கர் முதல்வர் பட்ஜெட் தாக்கல் செய்த பொழுது எடுத்த புகைப்படம்.





Share it if you like it