பொது சிவில் சட்டம்: சீமான் பாராட்டிய அருணன் அதிருப்தி!

பொது சிவில் சட்டம்: சீமான் பாராட்டிய அருணன் அதிருப்தி!

Share it if you like it

பொது சிவில் சட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர் அருணன் தனது கடும் அதிருப்தி தெரிவித்து இருப்பதற்கு பிரபல அரசியல் விமர்சகர் ஸ்ரீராம் தனது கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் முழுமையான அன்பினையும், பாராட்டினையும் பெற்றவர் அருணன். இவர், மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்க கூடியவர். மேலும், பாரதப் பிரதமர் மோடியை மிக கடுமையாக தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்பவர். இந்தியாவின், சாதனைகளை உலக நாடுகளே கொண்டாடினாலும் கூட அதற்கு எதிராக கருத்து தெரிவிக்க கூடியவர். அருணன்.

இதுதவிர, சீன கம்யூனிஸ்ட் அரசை உயர்வாகவும், இந்தியாவை விமர்சனம் செய்வதையே தனது முழு நேர பணியாக கொண்டவர் அருணன் என்பது பலரின் குற்றச்சாட்டு. கோடிகணக்கான இந்தியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய மத்திய அரசை பாராட்டாமல், சீன அரசை வெகுவாக பாராட்டியவர் இதே அருணன் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

இப்படிப்பட்ட சூழலில், பொது சிவில் சட்டத்தை விரைவில் கொண்டு வருவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் கூறியிருந்தார். இதற்கு, அருணன் தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியிருக்கிறார் ;

பொது சிவில் சட்டத்தை உறுதியாக கொண்டு வருவோம்”: அமித் ஷா. பிராமண புரோகிதர் வச்சுதான் கல்யாணம் என்கிறார்கள்! ஏற்கெனவே பல்லாயிரம் ரூபாய் தட்சணை வாங்குகிறார்கள், இனி பல லட்சம் ரூபாய் கேட்பார்கள். பிராமணியம் கொடிகட்டிப் பறக்கும் என குறிப்பிட்டு இருந்தார்.

அருணின் இந்த குழந்தை தனமான ட்விட்டர் பதிவிற்கு, பிரபல அரசியல் விமர்சகர் ஸ்ரீராம் சேஷாத்திரி கொடுத்த பதிலடி இதோ ;

உளறல் என்பதின் உச்சகட்டம், பொது சிவில் சட்டம் வந்தால் பிராமணர்களை மட்டும் வைத்துதான் கல்யாணம் செய்யவேண்டும் என கற்பனை செய்து, வெறுப்பு பிரச்சாரம் செய்யும் கீழ்தரமான அரசியல். கம்யூனிஸ்ட் கட்சியில் மேன்மை பொருந்திய தலைவர்கள் இருந்தார்கள், கம்யூனிசம் வீழ்வது இவர்கள் போன்றவர்களால்.


Share it if you like it