லவ்ஜிகாத் என்கிற காதல் வலையில் வீழ்த்தி, மத மாற்றி திருமணம் செய்து, குழந்தையையும் கொடுத்துவிட்டு முஸ்லீம் வாலிபர் எஸ்கேப்பானதால், நீதி கேட்டு பள்ளிவாசல் முன்பு இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அம்பலத்தாடிமடத் தெருவைச் சேர்ந்தவர் ஆஷிக் மகன் பக்கிம் அஸ்லாம். இவர், ஐஸ்கிரீம் கடை நடத்தி வந்தார். இவரது கடையில் கொத்தங்குடித் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் மகள் மகேஸ்வரி வேலை செய்து வந்தார். மகேஸ்வரியை காதல் வலையில் வீழ்த்திய பக்கிம் அஸ்லாம், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார். இதில் மகேஸ்வரி கர்ப்பமான நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தி இருக்கிறார். ஆனால், தன்னால் எதுவும் செய்ய இயலாது என்று கூறிய அஸ்லாம், தனது வீட்டில் வந்து பெற்றோரிடம் கேட்குமாறு கூறியிருக்கிறார்.
இதையடுத்து, மகேஸ்வரியும் அஸ்லாம் வீட்டிற்குச் சென்று அவரது பெற்றோரிடம் நீதி கேட்டிருக்கிறார். அதற்கு அஸ்லாம் தந்தை ஆஷிக் மறுப்புத் தெரிவித்திருக்கிறார். அதேசமயம், மகேஸ்வரி 8 மாத கர்ப்பமாக இருந்ததால், முஸ்லீம் மதத்துக்கு மாறினால் திருமணம் செய்து வைப்பதாகக் கூறியிருக்கிறார். இதை நம்பி, மகேஸ்வரியும் இஸ்லாமி மதத்துக்கு மாறிய நிலையில், ஆயிஷா என்று பெயர் சூட்டப்பட்டு கடந்த ஜனவரி 1-ம் தேதி சிதம்பரம் லெப்பை தெருவிலுள்ள பள்ளிவாசலில் நிக்கா நடைபெற்றது. பின்னர், ஜனவரி 16-ம் தேதி மகேஸ்வரி என்கிற ஆயிஷாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில்தான், பக்கிங் அஸ்லாம் திடீரென தலைமறைவாகி விட்டார். இதையடுத்து, தனது கணவரை அவரது தந்தை ஆஷிக் மறைத்து வைத்திருப்பதாகவும், கணவருடன் தன்னை சேர்த்து வைக்குமாறும் சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், போலீஸார் நடவடிக்கை எடுக்காததால், திருமணம் நடைபெற்ற லெப்பை தெரு பள்ளிவாசல் முன்பு, 3 மாத கைக்குழந்தை, உறவினர்களுடன் நீதி கேட்டு ஆயிஷா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர். தொடர்ந்து, ஆயிஷா மற்றும் உறவினர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.