தமிழகத்தில் சுங்கக் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது!

தமிழகத்தில் சுங்கக் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது!

Share it if you like it

தமிழ்நாட்டில் உள்ள 54 சுங்கச்சாவடிகளுடன் புதிதாக சில சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்களுக்கு கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இவற்றில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் குறிப்பிட்ட சுங்கச் சாவடிகளின் கட்டணமும் மற்ற சுங்க சாவடிகளின் கட்டணம் செப்டம்பர்-1 தேதியும் உயர்த்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கான செப்டம்பர் மாத கட்டண உயர்வு நள்ளிரவிருந்து அமலுக்கு வந்தது. அதன்படி திண்டுக்கல், திருச்சி, சேலம், மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி,உள்ளிட்ட தமிழ் நாடு முழுவதும் உள்ள 28 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதன்படி கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஒரு முறை சென்று கட்டணம் ரூ. 85-லிருந்து ரூ. 90 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இலகு ரக வாகனம் ஒரு முறை சென்று வர ரூ.145-லிருந்து ரூ.160- ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது கனரக வாகனங்களுக்கு ரு.290 லிருந்து ரூ 320-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


Share it if you like it