பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் சித்த மருத்துவ கல்லூரியில் 74 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மையத்தை அமைச்சர் நாசர், பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அண்மையில் திறந்து வைத்தனர்.
இதற்கு முன்னதாக அங்கு வந்த பூந்தமல்லி தி.மு.க எம்எல்ஏ கிருஷ்ணசாமி, அங்கிருந்த பேனரில் தனது பெயர் இல்லாததை கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார். பேனரில் தனது பெயர் ஏன்? இடம் பெறவில்லை என்று அரசு அதிகாரிகளை மிக கடுமையாக விமர்சனம் செய்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் வெற்றி பெற்ற தி.மு.கவினர். அ.தி.மு.கவினர் மீது கொலை வெறி தாக்குதல் நிகழ்த்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவினர் வெற்றிபெற்றதால் அதிமுக தேர்தல்பணியாளர்களை திமுகவினர் கொலைவெறி தாக்குதல். அங்கு உள்ள கடைகளும் சூறையாடல், கடலூர் அருகில் உள்ள கிராமத்தில். pic.twitter.com/8cePYMYUM9
— இந்து நாடார் (@ramaiyyah) May 23, 2021