திரைப்பட கதாநாயகர்களின் ரசிகர்களால் சமூகத்திற்கு என்ன பயன் என தி.மு.க. செய்தி தொடர்பாளர் எழுப்பிய கேள்விக்கு நெட்டிசன்கள் வாழ்த்தி வருகின்றனர்.
பொங்கலை முன்னிட்டு வெளியிடப்பட்ட திரைப்படம்தான் விஜய் நடித்த வாரிசு. அதேபோல, நடிகர் அஜீத் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம்தான் துணிவு. இவ்விரு, படங்களுக்கும் தமிழக மக்களிடையே பெரும் எதிர்பார்பை உருவாகியுள்ளது. அந்தவகையில், அஜீத் மற்றும் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனிடையே, தி.மு.க. செய்தி தொடர்பாளராக இருப்பவர் சல்மா. இவர், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், Sad . நடிகர்களை இந்த இளைஞர் சமூகம் இப்படி கொண்டாட என்ன இருக்கிறது? அவர்கள் இந்த சமூகத்திற்கு அளித்த பங்களிப்பு என்ன? என கேள்வி எழுப்பி இருக்கிறார். இவரது, கருத்து அஜீத் மற்றும் விஜய் ரசிகர்களிடையே கடும் கோவத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில், ஜாதி பெருமை, மதபெருமை, தாழ்ந்த ஜாதி, உயர்ந்த ஜாதி என்று பெருமை பேசும் நபர்களை கண்டிக்கும் விதமாக கடந்த 2019- ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் ‘ஆர்டிகில்-15’. இதனை மையமாக, வைத்து தமிழில் எடுக்கப்படம்தான் கலகத் தலைவன். இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் விநியோகம் செய்தது. இப்படத்தில், சேப்பாக்க சேகுவேரா என்று அழைக்கப்படும் உதயநிதி ஸ்டாலின் நடித்து இருந்தார். அப்படம், வெளியான சமயத்தில், தி.மு.க. செய்தி தொடர்பாளர் சல்மா வெளியிட்ட பதிவு இதோ ;
முதல் நாளே பார்க்க விரும்பி பார்த்த படம். சமகாலத்தின் அதிமுக்கிய பிரச்சனையை பேசுவதில் இந்த படம் வெற்றி பெற்றிருக்கிறது. ஆர்டிகள் 15 படத்தைப்போல வெல்லட்டும். இயக்குனருக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டு இருந்தார்.
அஜீத் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு உடனே அறிவுரை வழங்கிய சல்மா, கலகத் தலைவன் வெளியான அன்று இதே போன்றதொரு பதிவை வெளியிடாதது ஏன்? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.