காலிஸ்தான் பயங்கரவாதிகள் மரண விவகாரம் – பின் வாங்கும் கனடா – இறுக்கி பிடிக்கும் பாரதம்

காலிஸ்தான் பயங்கரவாதிகள் மரண விவகாரம் – பின் வாங்கும் கனடா – இறுக்கி பிடிக்கும் பாரதம்

Share it if you like it

சமீப காலமாக பாரதத்தின் தேசிய பாதுகாப்பு முகமை உளவுத்துறை உள்ளிட்டவற்றால் பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தப்பட்டு தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பயங்கரவாதிகள் பலரும் உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் மர்மமாக மரணித்தார்கள். அதில் கனடாவில் மரணம் அடைந்த ஹர்தீப் சிங் நிசார் என்னும் காலிஸ்தான் பயங்கரவாதியின் மரணத்தை முன்வைத்து கனடா பாரதத்தின் உளவுத்துறை வெளியுறவுத் துறை மீது குற்றச்சாட்டு வைத்தது. இதன் காரணமாக பாரதத்தில் இருந்த கனடா தூதர் வெளியேற்றப்பட்டார். பதிலுக்கு பாரதத்தின் கனடிய தூதரை கனடா வெளியேற்றியது . இரு தரப்பிலும் ராஜ்ய ரீதியாக மோதல் போக்கு அதிகரித்து வந்தது.

கனடா தனது ஐந்து கண் உறுப்பு நாடுகளிடமும் நேச நாடுகளிடமும் பாரதத்திற்கு எதிராக ஆதரவு கோரியது. ஆனால் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காத காரணம் கூறியும் ஆசியாவில் உலக அளவில் தவிர்க்க முடியாத சக்தியாக வளரும் பாரதத்தை பகைக்க வேண்டாம் என்றும் அந்த நாடுகள் ஒதுங்கிக் கொண்டது. மேலும் இது போன்ற விஷயங்களில் உரிய ஆவணம் ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு வைப்பது கனடா போன்ற நாகரிக நாட்டிற்கு அழகல்ல என்று தொடர்ச்சியான அறிவுறுத்தல்களும் கனடா பிரதமருக்கு கிடைத்து வந்தது.

பாரதம் தனது தரப்பு ஆதாரங்கள் கடந்த காலங்களில் கனடாவின் வெளியுறவுத் துறையிடம் சமர்ப்பித்த ஆவணங்கள் என்று அத்தனையையும் பல்வேறு உலக நாடுகளின் உளவு அமைப்புகளுக்கும் வெளியுறவுத்துறைக்கும் பகிரத் தொடங்கியது. உள்நாட்டில் காலிஸ்தான் பயங்கரவாதத்திற்கும் அவர்களோடு நேரடி தொடர்பில் இருந்து வரும் உள்ளூர் கூலிப்படைகள் சமூக விரோதிகள் உள்ளிட்டவர்களின் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியது. இதில் தேச பாதுகாப்பு முகமையும் உளவுத்துறை மாநிலங்களின் தீவிரவாத தடுப்பு பிரிவு காவல் துறை இணைந்து செயல்பட்டதில் நாடு முழுவதும் பயங்கரவாதிகளுக்கும் எதிராக தேடுதல் வேட்டைகளும் சொத்துக்கள் பறிமுதல் வங்கி கணக்கில் முடக்கம் ஆவணங்கள் கைப்பற்றுதல் என்று அதிரடி காட்டியது.

கனடா நாட்டில் இருக்கும் சீக்கிய வாக்கு வங்கியை மையமாக வைத்து தான் கனடா பிரதமர் இந்த காலிஸ்தான் பயங்கரவாதிகள் மரணத்திற்கு பாரதத்தின் மீது குற்றச்சாட்டை முன்வைத்ததாக கனடாவிலேயே அவர் மீது புகார் எழுந்தது. அதே நேரம் பாரதத்தின் மீது நீங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டிற்கு உரிய ஆவணங்களை சமர்ப்பியுங்கள் என்று கனடா பிரதமரை பார்த்து அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப தொடங்கியது. முன் எப்போதும் இல்லாத அளவில் பாரதம் கனடாவோடு பகை பாராட்ட தொடங்கியதன் மூலம் பாரதத்தின் நியாயத்தையும் கனடா பாரதம் மீது வைத்த அபாண்டக் குற்றச்சாட்டையும் புரிந்துகொண்டு அவர்களின் நாட்டு பிரதமருக்கு எதிராக கேள்விகளையும் விமர்சனங்களையும் முன்வைக்க தொடங்கினார்கள். இதை அடுத்து மலேசிய பிரதமர் முகாதீர் போல விரைவில் உங்களின் பதவியும் இழக்க கூடலாம் .அது எதிர்வரும் தேர்தலில் உங்களுக்கு பெரும் அரசியல் பின்னடைவை கொடுக்க கூடும் என்ற உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து கனடா பிரதமர் தற்போது அமைதியாகி இருக்கிறார்.

தனது வெளிப்படையான குற்றச்சாட்டுக்கு ஐந்து கண் நாடுகளின் கைவிரிப்பு நேச நாடுகளின் அதிருப்தி காரணமாக பெரும் மன உளைச்சலில் இருக்கும் கனடா பிரதமர் நிலைமையை சீராக்க கனடா நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரையும் பாதுகாப்புத்துறை அமைச்சரையும் களம் இறக்கி இருக்கிறார். இரு தினங்களுக்கு முன்பு கனடா நாட்டின் நாடாளுமன்றத்திலேயே கனடா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆசியாவின் பெரும் பங்களிப்பு வழங்கும் நாடு உலகின் தவிர்க்க முடியாத பொருளாதார சக்தியாக இருக்கும் ஜனநாயக நாடு பாரதம் கனடாவின் நெருங்கிய நட்பு நாடு அதனுடைய நட்பும் உறவும் கனடாவிற்கு மிகவும் முக்கியம். எந்த காரணம் கொண்டும் நாங்கள் அதை இழப்பதற்கு தயாராக இல்லை .காலிஸ்தான் பயங்கரவாதிகள் விவகாரம் சம்பந்தமான மோதல் ஒரு பக்கம் இருந்தாலும் ஆசிய பசிபிக் ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வுகளில் தொடர்ச்சியான ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் கனடா தரப்பிலிருந்து பாரதத்திற்கு தொடர்ந்து கிடைக்கும் என்று அறிவித்திருக்கிறார்.

கனடாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் எங்களது தேசத்தின் குடிமக்களை பாதுகாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் எங்களுக்கு இருக்கிறது. அந்த வகையில் எங்கள் நாட்டு குடிமக்களின் மரணம் .அது சம்பந்தமான விசாரணைகள் ஆய்வுகள் மேற்கொள்வது எங்களின் கடமை. அதே நேரத்தில் பாரதத்தின் நட்புறவும் நல்லெண்ணமும் தோழமையும் கனடாவிற்கு எப்போதும் தேவை. என்று பேசியிருந்தார். காலிஸ்தான் பயங்கரவாதி மரணம் பற்றிய விசாரணை அறிக்கைகள் முடிவுகள் பாரதத்திற்கு எதிராக வந்தால் அப்போது உங்களின் நிலை என்னவாக இருக்கும்? என்று கடந்த காலத்தை கனடா நாட்டின் பிரதமர் புருடோவிலும் பத்திரிகைகள் கேள்வி எழுப்பிய போது கனடா அதற்காக எந்த எல்லைக்கும் போகும் என்று ட்ரூடோ தெரிவித்திருந்தார். ஆனால் சில வாரங்களில் கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சரும் பாதுகாப்புத் துறை அமைச்சரும் எந்த காரணம் கொண்டும் பாரதத்தின் நட்புறவை நல்லெண்ணத்தை இழப்பதற்கு இல்லை. கனடாவிற்கு பாரதம் மிகவும் வேண்டப்பட்ட நாடு என்று பேச தொடங்கி இருக்கிறார்கள்.

சீக்கிய வாக்கு வங்கிகளுக்காக பாரதத்தின் மீது அவதூறு பரப்ப களம் இறங்கிய கனடா நாட்டு பிரதமர் தற்போது சொந்த நாட்டு மக்களின் அதிருப்திக்கும் அவநம்பிக்கைக்கும் ஆளாகி இருக்கும் காரணமே அவரை இந்த விவகாரத்தில் அமைதி காக்க வைத்திருக்கிறது. மறுப்புறம் கனடா பாரதத்திற்கு எதிராக இப்படி ஒரு அவமதிப்பை செய்ததன் காரணமாக உலகம் முழுவதிலும் இருக்கும் ஒவ்வொரு நாட்டின் வெளியுறவுத் துறையும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளும் கனடாவிற்கு தனிப்பட்ட முறையில் தங்களின் அதிருப்தியையும் அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்கள். நிலைமை மேலும் மோசம் அடைந்தால் விரைவில் கனடா உலக அளவில் தனிமைப்படக்கூடும் என்ற அச்சமடைந்த கனடா அரசு சுதாரித்துக் கொண்டது. அதன் காரணமாக பாதுகாப்புத்துறை அமைச்சரையும் வெளியுறவுத்துறை அமைச்சரையும் களமிறக்கி நிலைமையை சீராக்க முயற்சி செய்கிறது.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க ஒரே வார்த்தையில் எங்களுக்கு ஒரு தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் நாங்கள் குற்றச்சாட்டு முன்வைத்து விட்டோம். ஆனால் பாரதத்தை புண்படுத்தும் எண்ணமோ அவமதிக்கும் எண்ணமோ இல்லை என்று கனடா பிரதமர் இதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். ஆனால் அதற்கு அவருக்கு மனம் இல்லை .காரணம் அவர்களது அரசியல் நகர்வு கடந்த கால வரலாறும் எப்போதும் பாரதத்தை அலட்சியப்படுத்தியும் அவமதிப்பு செய்து வந்தது .கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகள் வாரிசு அரசியலாக ஆண்டு வரும் குடும்ப அரசியலின் அவர்களின் வம்சாவழி இந்திரா ராஜீவ் நரசிம்மராவ் தொடங்கி தற்போதைய மோடி அரசு வரை அவமதிப்பதையே வழக்கமாகக் கொண்டிருப்பது. அதனால் அவர்களிடம் இந்த குறைந்தபட்ச நாகரிகத்தை பாரதமும் எதிர்பார்க்காது. உலக நாடுகளும் எதிர்பார்க்காது.

பாரதத்தின் தற்போது இருக்கும் ஆட்சியாளர்களும் வெளியுறவுத் துறையும் உளவுத்துறையோ பலவீனமாக இல்லை. மடியில் கனமில்லை அதனால் வழியில் பயமில்லை என்ற துணிச்சலாக பயணிக்கிறது. பாரதத்தின் இறையாண்மை அப்படி இருக்க இது கடந்த காலங்களில் தாங்கள் கொடுத்த ஆவணங்களின் அடிப்படையில் எந்த ஒரு நடவடிக்கையும் தெளிவான நிலைப்பாட்டிற்கும் வராத கனடா அதே பயங்கரவாதியின் மரணத்தை வைத்து தன் மீது குற்றச்சாட்டு வைத்ததையோ உலக அரங்கில் அவமதித்தது பாரதம் அவ்வளவு எளிதாக கடந்து போகாது . அதனால் கனடாவிற்கு எதிரான நடவடிக்கைகள் அரசியல் கடந்து வியாபாரம் வர்த்தகம் பொருளாதாரம் என்று எல்லா மட்டத்திலும் இனிவரும் காலங்களில் நிச்சயம் எதிரொலிக்கும் என்ற கருத்தே மேலோங்கி நிற்கிறது.

உலக அரங்கில் பெரும் சக்தியாக எழுந்து வரும் பாரதத்தை காலிஸ்தான் பயங்கரவாதிகள் மரணத்தை வைத்து அவமதித்துவிடலாம். அதன் மூலம் தனது நீண்ட கால வன்மத்தை தீர்த்துக் கொள்ளலாம் என்று நினைத்த கனடா நாட்டு பிரதமர் தற்போது நிலை குலைந்து இருக்கிறார். ஒருபுறம் எதிர்க்கட்சிகளின் கேள்விக்கணைகள் மறுபுறம் சொந்த நாட்டு மக்களிடையே அவநம்பிக்கை அதிருப்தி .உலக அளவில் நட்பு நாடுகள் சர்வதேச அமைப்புக்களின் அறிவுறுத்தல் மறைமுக அழுத்தம் என்று தொடர்ச்சியான எதிர்ப்புகள் கனடா நாட்டு பிரதமரை சூழ்ந்து நிற்கிறது. இவை யாவும் கடந்த காலத்தில் பாரதத்தின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட்டு கருத்து தெரிவித்து மோதல் போக்கை முன்னெடுத்த மலேசிய பிரதமர் வரலாற்றையும் பின்னர் அவரது நிலையையும் உலக நாடுகளுக்கும் கனடா பிரதமருக்கும் நினைவூட்டி இருக்கிறது. இதன் காரணமாக பாரதத்தின் பிடியிலிருந்தும் இந்த காலிஸ்தான் விவகாரத்தில் இருந்தும் தப்பிப் பிழைத்தால் போதும் என்ற நிலைக்கு கனடா நாட்டு பிரதமர் ஆளாகி இருக்கிறார். ஆனால் எந்த நிலையிலும் பின் வாங்குவதற்கு இல்லை. தனது தேசத்தின் இறையாண்மை பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் அத்துமீறிய கனடா அதற்குரிய பதிலை கொடுத்தே ஆக வேண்டும் என்று விடாப்பிடியாக பாரதம் முன்னேறிச் செல்கிறது.


Share it if you like it