தீபாவளி பண்டிகைக்காக மட்டுமே என்பதைத்தாண்டி ஹிந்துக்கள் தங்கள் வலிமையையும், ஒற்றுமையையும், காட்ட வேண்டிய ஒரு கட்டாயத்தில் உள்ளோம் – பிரபல எழுத்தாளர் ராம சுப்பிரமணியம் கருத்து…!

தீபாவளி பண்டிகைக்காக மட்டுமே என்பதைத்தாண்டி ஹிந்துக்கள் தங்கள் வலிமையையும், ஒற்றுமையையும், காட்ட வேண்டிய ஒரு கட்டாயத்தில் உள்ளோம் – பிரபல எழுத்தாளர் ராம சுப்பிரமணியம் கருத்து…!

Share it if you like it

தீபாவளி கொண்டாடுவது என்பது பண்டிகைக்காக மட்டுமே என்பதைத்தாண்டி இந்துக்கள் தங்கள் வலிமையையும், ஒற்றுமையையும், காட்ட வேண்டிய ஒரு சந்தர்ப்பமாக பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கொண்டாடுவதில் கிடைக்கும் மகிழ்ச்சி கூட இன்று இரண்டாம் பட்சம் தான்.

சமூகத்தின் ஒவ்வொரு தரப்பினரையும் ஒவ்வொரு பண்டிகைகள் மூலம் ஆதரிப்பது ஹிந்துப் பண்டிகைகளின் தனிச்சிறப்பு. விநாயக சதுர்த்தியில் குயவர்களையும், நவராத்திரியில் பொம்மை செய்பவர் மற்றும் எல்லாக் கலைஞர்களையும் ஆதரித்து, தீபாவளியின்போது நெசவாளர்களுக்கும், பட்டாசு செய்வோருக்கும், இனிப்புப் பண்டங்கள் செய்வோருக்கும் ஆதரவாக நிற்பது நம் பாரம்பரியம்.

இப்படி உயர்ந்துநிற்கும் நமது மதத்திற்கு எல்லாவிதத்திலும் கேடு விளைவிக்கக் காத்திருக்கும் கூட்டம் அரசியல் ஆதாயத்திற்காக என்னதான் செய்தாலும், செய்ய விரும்பினாலும், நமது பாரம்பரியத்தைப் பராமரிக்கும் வகையிலும் முக்கியமாகப் பண்டிகை தரும் மகிழ்ச்சிக்காகவும் “நாங்கள், நாங்களாகவே தான் இருப்போம்.. பாரில் பெருமைக்குரியது எமது மதம். இந்துக்களாக இருப்பது எமக்குப் பெருமை தருகிறது. மகிழ்ச்சி அளிக்கிறது.” என்று நமது குரல் உரத்து ஒலிக்குமாறு இந்தத் தீபாவளியை விமரிசையாகக் கொண்டாடுவது நமது கடமை! அதேசமயம் அரசாங்கம் விதிக்கும் விதிமுறைகளையும் மீறாமல் பார்த்துக்கொள்வோம்.

உண்மையா பொய்யா?

1 . பட்டாசு வெடிப்பது காற்றை மாசுபடுத்துகிறது:

இந்த ஈரமான மழை நாட்களில் பட்டாசு மூலம் கிருமிகள் அழிகிறது என்பது விஞ்ஞான உண்மை. தவிர கொசுக்கள் அழிவதும் கண்கூடு. வருடத்தில் ஒருநாள் மட்டுமே வைக்கிற பட்டாசுகளால் தான் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்பது உண்மைக்கும் புறம்பானது, வன்மையாக கண்டிக்கத் தக்கது. ஆலைகளிலிருந்து வருடமுழுதும் வெளிவரும் மாசுகளால் டில்லி உட்பட சில நகரங்களே கூட பாதிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைத்தான் தூய்மைப் படுத்த அரசு அரசியல் கலக்காத சரியான நடைமுறைகளைக் கையாள வேண்டும்‌. காற்றுமாசு குறைந்த அளவே செய்யும் பசுமைப் பட்டாசுகளை ஆதரிக்கலாமே..

  1. வெடிச்சத்தம் ஒலித்தொல்லை தருகிறது:

ஓப்பரா (Opera) இசைப்பாடகரின் குரல் உச்சம் தொடும்போது கண்ணாடி ஒயின் கோப்பைகள் சிதறியிருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? வருடத்தில் ஒருநாள் நம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக வெடிக்கும் பட்டாசை, ஒலித்தொல்லை என்று பார்ப்பதை விட்டு பேரொலிகளால் (100dB – 125dB) தொற்றுக் கிருமிகள் அழிகின்றன என்ற ஆய்ந்த அறிவியல் உண்மையை தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பமாகக்கூட இதைப்பார்க்கலாமே..

  1. சிவகாசியில் பட்டாசு ஆலையில் சிறுவர்களை வேலைசெய்யத் தூண்டுகிறார்கள்:

முன்னர் அம்மாதிரியான நிலை இருந்தது என்பது உண்மை தான். அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகளால் தற்போது அந்த நிலை மாறிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

  1. பட்டாசுக் கிடங்கில் வெடிவிபத்து ஏற்படுகிறது:

எல்லாத் தொழில்களிலும் தான் அதற்கான ஆபத்துகள் காத்திருக்கின்றன. பட்டாசு ஆலையிலும், கிடங்கிலும், கடைகளிலும் தான். அதற்காக தொழிலாளர்கள் அத்தொழிலை விட்டுவிட முடிகிறதா? அதுவும் குடும்பத்தின் வறுமையைத் நீக்குமானால்? ஆபத்துக்கள் நிகழாவண்ணம் கவனமாக இருக்கும் வழிமுறைகளையும், ஆயுள் காப்பீட்டையும் மீறமுடியாத படி கட்டாயமாக்குவது மட்டுமல்லாது தீவிரமாகத் தொடர்ந்து கண்காணிப்பதும், அரசின் கடமை.

  1. சாஸ்திரத்தில் பட்டாசு கொளுத்தச் சொல்லப் பட்டுள்ளதா?

ஆம். மத்தாப்பு கொளுத்த சொல்லப்பட்டுள்ளது. காரணம், அதன் வெளிச்சத்தில் மஹாளய பக்ஷத்தின்போது பூமிக்கு வந்த நமது முன்னோர்கள் மீண்டும் சொர்க்கம் செல்ல அது உதவுகிறதாம்.

ஆதாரம்:

“ஸ்மிருதி கௌஸ்” என்ற ஸ்தோத்திரத்தில் கீழ்க்கண்ட ஸ்லோகம்

“துலா ஹம்ஸ்தே ஸஹஸ்ராம்சௌ ப்ரதோஷே பூத தர்ஸ்யோ:
உல்கா ஹஸ்தா நரா: குர்யு: பித்ரூணாம் மார்க தர்சனம்”
(துலா – ஐப்பசி; பூத – சதுர்தசி, அதாவது தீபாவளி; உல்கா ஹஸ்தா – கையில் பிடிக்கும் நெருப்பு அதாவது மத்தாப்பு..

எழுத்தாளர் ; ராம சுப்பிரமணியம்…


Share it if you like it