பட்டாசு வெடிக்க கூடாது என்ற ஞானம் தீபாவளி அன்று மட்டும் தான் தோன்றுமா? – விரேந்திர சேவாக் காட்டமான கேள்வி..!

பட்டாசு வெடிக்க கூடாது என்ற ஞானம் தீபாவளி அன்று மட்டும் தான் தோன்றுமா? – விரேந்திர சேவாக் காட்டமான கேள்வி..!

Share it if you like it

கொரோனா தொற்றின் கோர தாண்டவத்தில் பலர் மிக கடுமையான இன்னல்களையும், அவதிகளையும், சந்தித்து மெல்ல மெல்ல மீண்டு வரும் இந்நிலையில். ஹிந்துக்களின் பண்டிக்கையான தீபாவளிக்கு வாழ்த்து கூட தெரிவிக்காத. தி.க, வி.சி.க, திருமா, மற்றும் சில்லறை ஊடகங்கள் மற்றும் போலி நெறியாளர்கள் தீபாவளிக்கு எதிரான மனநிலையிலேயே இன்று வரை பேசி வருகின்றனர் என்பது கசப்பான உண்மை. .

கிறிஸ்துமஸ் பண்டிகை, ஆங்கில புத்தாண்டு, இஸ்லாமியர்கள் பண்டிகைகளுக்கு, பட்டாசு வெடித்தால் கருத்து கூறாமல் கள்ள மெனம் காக்கும்., இந்த போராளிகள். தீபாவளி அன்று மட்டும் பட்டாசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதன் மூலம் இவர்களின் உண்மையான சுயரூபத்தை அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

இந்நிலையில் நேற்றைய தினம் 20 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி தோல்வியடைந்ததையொட்டி சிலர் பட்டாசு வெடித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தனர். எதற்காக இவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி இருப்பார்கள் என்பதை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியும். இதனை தொடர்ந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்து உள்ளார்.

தீபாவளியின் போது பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், பாகிஸ்தானின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் நேற்று இந்தியாவின் சில பகுதிகளில் பட்டாசுகள் வெடித்தன. தீபாவளியன்று மட்டும் பட்டாசு வெடிப்பதால் இவர்களுக்கு என்ன பாதிப்பு. பட்டாசு வெடிக்க கூடாது என்ற ஞானம் இவர்களுக்கு தீபாவளி அன்று தான் தோன்றுமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


Share it if you like it