மத பயங்கரவாதம் நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய சவால்!

மத பயங்கரவாதம் நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய சவால்!

Share it if you like it

மத பயங்கரவாதம் நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய சவால் என்று போலீஸ் தலைவர்கள் மாநாட்டில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கள் மற்றும் ஐ.ஜி.க்கள் பங்கேற்ற 3 நாள் மாநாடு டெல்லியில் நடந்தது. இம்மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாட்டின் பாதுகாப்பு பிரச்னைகள் தொடர்பான இந்த மாநாட்டில், போலீஸ் உயர் அதிகாரிகள் பலரும் ஆய்வறிக்கையை தாக்கல் செய்தனர். அந்த ஆய்வறிக்கையில், “நாட்டில் மத அடிப்படைவாதம் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, முஸ்லிம்களிடையே இப்பிரச்னை மிகத் தீவிரமாக இருக்கிறது. மதபோதனை, எல்லை கடந்த பயங்கரவாதம், அண்டை நாடுகளின் துாண்டுதல் போன்றவை நம் நாட்டின் பாதுகாப்புக்கு மிகப் பெரும் சவாலாக உருவெடுத்து வருகிறது.

முஸ்லிம் இளைஞர்கள் மத ரீதியில் பயங்கரவாதத்தில் ஈடுபடும்படி மூளைச்சலவை செய்யப்படுகின்றனர். இந்த மத பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதில், சமீபத்தில் தடை செய்யப்பட்ட பாப்புலர் ப்ரன்ட் ஆஃப் இந்தியா, தடை செய்யப்பட்ட அமைப்புகளான சிமி, வஹாத் – இ – இஸ்லாமி, இஸ்லாமிக் இளைஞர் கூட்டமைப்பு, ஹிஸ்பத் தஹ்ரீர், அல் உம்மா போன்றவை ஈடுபட்டிருக்கின்றன. இவர்கள் முஸ்லிம் இளைஞர்களிடம் மதப் பெருமையை ஊட்டுவதாகச் சொல்லி, பயங்கரவாத செயல்களிலும் வன்முறையிலும் ஈடுபட துாண்டி விடுகின்றனர். இது நம் நாட்டின் கலாசாரம், ஒருமைப்பாடு, மத நல்லிணக்கம், உள்நாட்டு பாதுகாப்புக்கு எதிராக இருக்கிறது. இஸ்லாமிய கொள்கைகள், நுால்கள், எழுத்துகளை தங்களுக்கு ஏற்ப திரித்து, முஸ்லிம் இளைஞர்கள் தவறான வழியில் வழிநடத்தப்படுகின்றனர்.

தாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்ற பச்சாதாபத்தை ஏற்படுத்தி, இவ்வாறு துாண்டி விடுகின்றனர். இதற்காக, மேற்கண்ட அமைப்புகள் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றன. இது தொடர்பான கருத்துகள், மொபைல் போன் உள்ளிட்ட நவீன தகவல் பரிமாற்ற சாதனங்கள் வாயிலாக தொடர்ந்து பரிமாறப்படுகின்றன. இந்த அமைப்புகளுக்கு, நம் அண்டை நாடான பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு தருகிறது. அதேபோல, வளைகுடா நாடுகள் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் நம் நாட்டு முஸ்லிம் இளைஞர்களும், அங்கு மூளைச்சலவை செய்யப்படுகின்றனர். ஆகவே, மதமாற்றம், மத பயங்கரவாதம் எந்தப் பகுதிகளில் அதிகம் நடக்கிறது என்பதை கண்டறிந்து, தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், இதுபோன்ற அமைப்புகளால் நாட்டின் பாதுகாப்புக்கு ஏற்படும் அபாயம் குறித்து மாநில போலீஸ் துறையினருக்கு தெரிவிக்க வேண்டும். தவிர, மிதவாத முஸ்லிம் தலைவர்கள், மத குருக்கள் மற்றும் அமைப்புகளின் நம்பிக்கையை பெறுவதுடன், அவர்களின் உதவியையும் நாடலாம்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Share it if you like it