பயங்கரவாதத்தை வேரறுக்க தனி குழு: குவாட் முடிவு!

பயங்கரவாதத்தை வேரறுக்க தனி குழு: குவாட் முடிவு!

Share it if you like it

பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க, தனியாக ஒரு குழு அமைப்பது என்று குவாட் நாடுகள் முடிவு செய்திருக்கின்றன.

இந்திய மற்றும் சீன பெருங்கடல் பகுதிகளில் சீனாவின் ஆதிக்கத்தை ஒடுக்கும் வகையில், இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து, ‘குவாட்’ என்ற அமைப்பை துவக்கி இருக்கின்றன. இந்த சூழலில், குவாட் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களின் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்காவின் பிளிங்கென், ஜப்பானின் யோஷிமசா ஹயாஷி, ஆஸ்திரேலியாவின் பென்னி வோங் ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தைத் தொடர்ந்து, குவாட் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், “பயங்கரவாதம், வன்முறை ஆகியவை புதுப்புது வடிவங்களில் தினமும் உருவெடுத்து வருகின்றன. இவை, அமைதியான வாழ்க்கைக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றன. இவற்றை எதிர்கொள்வதற்கும், முறியடிப்பதற்கும், குவாட் அமைப்பு சார்பில் ஒரு செயற்குழு அமைக்கப்படும். சட்டத்தின் ஆட்சி, இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சர்ச்சைகளுக்கு அமைதியான வழியில் தீர்வு காண்பதில் குவாட் உறுதியாக இருக்கிறது.

தற்போது, ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை வகித்திருக்கிறது. ஜி7 அமைப்புக்கு ஜப்பான் தலைமை வகித்திருக்கிறது. ஆசிய, பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டை அமெரிக்கா நடத்தவிருக்கிறது. இது குவாட் அமைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Share it if you like it