உலகிலேயே பழமையான மதம் இஸ்லாம்தான். நரேந்திர மோடிக்கும், மோகன் பாகவத்திற்கும் எந்தளவுக்கு இந்தியா சொந்தமானதோ, அதே அளவுக்கு எங்களுக்கும் சொந்தமானது என்று ஜாமியத் உலமா இ ஹிந்த் அமைப்பின் தலைவர் மஹ்மூத் மதானி தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் உள்ள பழமையான இஸ்லாமிய அமைப்புகளில் ஒன்றான ஜாமியத் உலமா இ ஹிந்த் அமைப்பின் 34-வது பொதுக்கூட்டம் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் அவ்வமைப்பின் தலைவர் மஹ்மூத் மதானி பேசுகையில், “இஸ்லாம்தான் உலகிலேயே மிகவும் பழமையான மதம். இந்தியா நமது நாடு. இந்த நாடு நரேந்திர மோடிக்கும், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கும் எவ்வளவு சொந்தமோ, அதே அளவு மஹ்மூத்துக்கும் சொந்தமானது. ஒரு அங்குலம் கூட மஹ்மூத் அவர்களைவிட முன்னால் இல்லை. அதேபோல் அவர்கள் மஹ்மூத்தை விட ஒரு அங்குலமும் பின்னால் இல்லை.
முஸ்லீம்களின் முதல் தாயகம்தான் இந்த நிலம். வெளி நாட்டில் இருந்து வந்த மதம் இஸ்லாம் என்று கூறுவது முழுவதும் தவறானது. அது அடிப்படை இல்லாத வாதம். இந்தி பேசும் முஸ்லீம்களுக்கு இந்தியா சிறந்த நாடு. கட்டாய மதமாற்றத்துக்கு எதிராக நாங்கள் உள்ளோம். எந்த மதத்தை பின்பற்ற வேண்டும் என்ற சுதந்திரம் என்பது மக்களின் அடிப்படை உரிமை. மோசடி செய்தோ, பேராசைக்காகவோ, கட்டாயத்தின் பேரிலோ மதமாற்றம் நடைபெறுவதை நாங்களும் எதிர்க்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.
இக்கூட்டத்தில், இஸ்லாமிய வெறுப்பு அதிகரித்து வருகிறது. சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையைத் தூண்டுபவர்களை தண்டிக்க தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும். நாட்டில் வெறுப்பு பிரசாரம் மற்றும் இஸ்லாமோபோபியா அதிகரிப்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் வேடிக்கை என்னவென்றால், உலகிலேயே பழமையான மதம் ஹிந்து மதம்தான் என்று வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன. அப்படி இருக்க, இஸ்லாம்தான் உலகிலேயே பழமையான மதம் என்று மஹ்மூத் மதானி கூறியிருப்பது வேடிக்கையைக இருக்கிறது.