ஜே.என்.யூ.வில் நடந்தது என்ன? கலவரத்தை தூண்டிய லதா யார்? ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? நேரடி ரிப்போர்ட்!

ஜே.என்.யூ.வில் நடந்தது என்ன? கலவரத்தை தூண்டிய லதா யார்? ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? நேரடி ரிப்போர்ட்!

Share it if you like it

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் என்ன நடந்தது என்பது தெரியாமலேயே ஸ்டாலின் அறிக்கை விட்டிருப்பது கடும் விமர்சனங்களை கிளப்பி இருக்கிறது. அதேசமயம், நடந்தது என்ன என்பது குறித்து அப்பல்கலைக்கழக மாணவர் அண்ணாதுரை ஸ்டாலின் விளக்கம் அளித்திருக்கிறார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள், தமிழக மாணவர்களை தாக்கிவிட்டதாக நேற்று சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. இதை கண்டித்து வழக்கம்போல சமூக வலைத்தளப் போராளிகள் கம்பு சுற்றிக் கொண்டிருக்க, தி.மு.க.வைச் சேர்ந்தவர்களும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளை வசைபாடிக் கொண்டிருந்தனர். இந்த சூழலில், தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்திருப்பதோடு, ஏ.பி.வி.பி. அமைப்பினரையும் குற்றம்சாட்டி இருக்கிறார். இதுதான் கடுமையான விமர்சனத்தை கிளப்பி இருக்கிறது.

உண்மையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன? அப்பல்கலைக்கழத்தில் முனைவர் பட்டம் (பி.எச்.டி.) பெறும் மாணவரும், ஏ.பி.வி.பி. அமைப்பின் நிர்வாகியுமான அண்ணாதுரை ஸ்டாலின் நேரடியாக விவரிக்கிறார். “வெள்ளையர்களை விரட்டியடித்த மாவீரன் சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாள் நேற்று. இதையொட்டி, சிவாஜியின் வீரதீர செயல்களை விளக்கும் வகையில், சிறப்பு நிகழ்ச்சிக்கு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தோம். அதன்படி, நிகழ்ச்சியை 6 மணிக்கு தொடங்கி 7.30 மணியளவில் நிறைவு செய்துவிட்டு, சிறிது ஓய்வு எடுப்பதற்காக, பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த கேன்டீனுக்கு சென்றோம். சுமார் 8 மணியளவில் அரங்கத்தில் ஏதோடு சத்தம் கேட்டது. குறிப்பாக, கண்ணாடி உடையும் சத்தம் கேட்டது.

உடனே, நாங்கள் விரைந்து வந்து பார்த்தோம். அப்போது, லதா என்கிற பெண் சிவாஜியின் போட்டோவை உடைத்து சேதப்படுத்திக் கொண்டிருந்தார். இவர், ஜவஹர்லால் பல்கலைக்கழக மாணவியே கிடையாது. அப்படி இருக்க, இவர் எப்படி இரவு 8 மணிக்கு கல்லூரி வளாகத்திற்குள் வந்தார், யார் இவரை அழைத்து வந்தது, எதற்காக அழைத்து வந்தார்கள்? என்கிற கேள்விகள் எங்களுக்குள் எழுந்தது. இதை நாங்கள் கேட்டோம். பதிலுக்கு அவர் எங்களை கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டே இருந்தார். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திய மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த (எஸ்.எஃப்.ஐ.) மாணவர்கள் ஆதரவாக இருந்தார். அவர்களில் ஒருவர்தான் தமிழகத்தைச் சேர்ந்த நாசர். அவரும் ஜஹவர்லால் நேரு பல்கலைக்கழக மாணவரா என்பது தெரியவில்லை. ஆனால், அவர் பல்கலைக்கழக அமைப்பு ஒன்றில் இருப்பதால் மாணவராக இருக்கலாம்.

அதேசமயம், லதா யார்? இவ்வளவு பிரச்னைக்கும் காரணம் அந்த லதாதான். இதையெல்லாம் மூடி மறைத்து விட்டு, தமிழக மாணவர்கள் தாக்கப்பட்டதாக ஏ.பி.வி.பி. அமைப்புக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். நானும் தமிழக மாணவர்தான். என்னைத் தாக்கினார்களா ஏ.பி.வி.பி. அமைப்பினர். ஆகவே, என்ன நடந்தது என்பது தெரியாமல் முதல்வர் ஸ்டாலின் கருத்துத் தெரிவித்திருப்பது தவறு. தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிரபு என்கிற ராணுவ வீரர், தி.மு.க. கவுன்சிலர் ஒருவரால் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த விவகாரம் தற்போது தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ஆகவே, அந்த விஷயத்தை மடைமாற்றுவதற்காக, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழத்தில் தமிழக மாணவர்கள் தாக்கப்பட்டதாகக் கூறி விஷயத்தை திசை திருப்பி வருகிறார்கள்” என்று கூறியிருக்கிறார். அண்ணாதுரை ஸ்டாலின் மேலும் பேசியதைக் காண கீழே இருக்கும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Share it if you like it