ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு: மத்திய அரசின் அறிவிப்புக்கு ஹிந்துக்கள் கடும் எதிர்ப்பு!

ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு: மத்திய அரசின் அறிவிப்புக்கு ஹிந்துக்கள் கடும் எதிர்ப்பு!

Share it if you like it

டெல்லியின் பக்கர்வாலா பகுதியில் வசிக்கும் ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள், அடிப்படை வசதிகள் மற்றும் 24 மணிநேர பாதுகாப்புடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மாற்றப்படுவார்கள் என்கிற மத்திய அரசின் முடிவுக்கு, ஹிந்துக்களும், ஹிந்து அமைப்புகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றன.

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இன்று காலை வெளியிட்ட தனது ட்விட்டர் பதிவில்,” டெல்லியின் பக்கர்வாலா பகுதியில் வசிக்கும் ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள், அடிப்படை வசதிகள் மற்றும் 24 மணிநேர பாதுகாப்புடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மாற்றப்படுவார்கள்” என்றும், “இது ஒரு முக்கிய முடிவு. நாட்டில் தஞ்சம் புகுந்தவர்களை இந்தியா எப்போதும் வரவேற்கிறது” என்றும் கூறியிருந்தார். மேலும், மற்றொரு பதிவில், “இதன் மூலம் இந்தியாவின் அகதிகள் கொள்கையை, சி.ஏ.ஏ.வுடன் வேண்டுமென்றே இணைத்து அவதூறுகளை பரப்புவதை ஒரு தொழிலாகச் செய்தவர்கள் ஏமாற்றமடைவார்கள்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ரோஹிங்கியா அகதிகளை தேசிய தலைநகரான டெல்லியில் தங்க வைப்பது தொடர்பாக, டெல்லி தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இக்கூட்டத்தில் டெல்லி அரசு, டெல்லி காவல்துறை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதாவது, கடந்த ஜூலை கடைசி வாரத்தில் நடைபெற்ற கூட்டத்தில், மதன்பூர் காதர் பகுதியிலுள்ள முகாமில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டனர். இதற்கு டெல்லி அரசு மாதம் ரூ.7 லட்சம் ரூபாய் வாடகை செலுத்தி வந்தது. ஆகவே, இதை தவிர்க்கும் பொருட்டு, ரோஹிங்கியாக்களை அடுக்குமாடி குடியிருப்புகளில் தங்க வைக்க முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், மத்திய அரசின் இந்த முடிவுக்கு நாட்டில் பயங்கர எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது. காரணம், டெல்லியில் 2020-ல் நடந்த கலவரத்தில் அதிகளவில் ஈடுபட்டது ரோஹிங்கியா முஸ்லீம்கள்தான் என்பது அனைவரும் அறிந்ததுதான். டெல்லி மட்டுமல்லாது, உத்தரப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் ரோஹிங்கியா முஸ்லீம்கள் ஊடுருவி இருக்கிறார்கள். இவர்களுக்கு அப்பகுதிகளிலுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அடைக்கலம் கொடுத்து வைத்திருக்கிறார்கள். ஹிந்துக்களுக்கு எதிராக பிரச்னை வெடிக்கும் போதெல்லாம் இந்த ரோஹிங்கியா முஸ்லீம்களை களமிறக்கி விடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். ரோஹிங்கியா முஸ்லீம்கள் ஈவு இரக்கமற்றவர்கள். இதனால்தான், ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு ஈரான், சிரியா உள்ளிட்ட முஸ்லீம் நாடுகளே அடைக்கலம் கொடுப்பதில்லை. ஆகவே, இந்த ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு அடைக்கலம் கொடுத்து நாட்டை சீரழிப்பதோடு, அவர்களை நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள் ஹிந்துக்களும், ஹிந்து அமைப்பினரும்.

இதுகுறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மத்திய செயல் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான அலோக் குமார் கூறுகையில், “மத்திய அரசின் அறிக்கையைப் பார்த்து நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ரோஹிங்கியா முஸ்லீம்களை அகதிகள் என்று கூறியிருப்பதோடு, அவர்களுக்கு டெல்லி பக்கர்வாலாவில் உள்ள இ.டயுள்யூ.எஸ். குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்வதாகவும் அறிவித்திருக்கிறார். அதேசமயம், நான் இன்னொன்றையும் நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும். அதாவது, 2020 டிசம்பர் 10-ம் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய அமித் ஷா, ரோஹிங்கியாக்கள் இந்தியாவில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள் என்று கூறியிருந்தார்.

தவிர, ரோஹிங்கியா முஸ்லீம்கள் அகதிகள் அல்ல, ஊடுருவல்காரர்கள் என்பது உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரம் உட்பட இந்திய ஒன்றியத்தின் நிலையான நிலைப்பாடு. அதோடு, பாகிஸ்தானில் இருந்து வரும் ஹிந்து அகதிகள் டெல்லியின் மஜ்னு-கா-திலா பகுதியில் தொடர்ந்து பரிதாபத்துக்குரிய நிலைமையில் வசித்து வருகிறார்கள். அப்படி இருக்க, ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு மட்டும் வழங்க முன்மொழியப்பட்ட வரப்பிரசாதம் வருத்தமளிக்கிறது. ஆகவே, இந்த விஷயத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென இந்திய அரசை விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்துகிறது, மேலும், ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு வீடு வழங்குவதற்கு பதிலாக, அவர்களை இந்தியாவிலிருந்தே திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு பொருளாதார ரீதியில் நலிவடைந்தவர்களுக்கான வீடுகளை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக மத்திய அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ரோஹிங்கியாக்களை இடம் மாற்றி வைப்பது தொடர்பாக மட்டுமே பரிசீலனை செய்து வருகிறது. எனினும், தற்போதைக்கு எந்த மாற்றமும் இல்லை. ரோஹிங்கியா முஸ்லீம்கள் நாடு கடத்தப்படும்வரை பழைய தடுப்பு முகாம்களில் இருப்பதை டெல்லி அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Share it if you like it