இட ஒதுக்கீடு சட்டத்தால் தேசம் கண்ட சீரழிவு – பொது சிவில் சட்டம் ஒன்றே தீர்வு

இட ஒதுக்கீடு சட்டத்தால் தேசம் கண்ட சீரழிவு – பொது சிவில் சட்டம் ஒன்றே தீர்வு

Share it if you like it

யாவருக்கும் சம நீதி என்பதே சமூக நீதி காக்கும் சட்டமாக இருக்க முடியும். தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப அனைவருக்கும் வாய்ப்புகள் பொதுவெளியில் வழங்கப்படுவது ஒன்றே உண்மையான சமூக நீதியாக இருக்க முடியும். பின் தங்கிய ஒருவனை முன்னேற்ற நினைப்பதில் தவறேதும் இல்லை. ஆனால் அதற்காக ஆர்வத்தோடு முன்னோக்கி பயணிப்பவனின் கால்களை கட்டி போட வேண்டாம்.நல்ல கல்வி அறிவும் ஆர்வமும் இருந்தாலோ ஓரளவு வசதி உள்ள குடும்பங்களில் பிறந்தாலோ தனியார் கல்லூரிகளில் முழு கட்டணமும் செலுத்தி படித்து பட்டம் பெறுகீறார்கள்.இட ஒதுக்கீடு காரணமாக இவர்களால் இந்த தேசத்தில் அரசு பணி என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. அதனால் தங்களின் எதிர்கால நலன் கருதி தங்களின் திறமைக்கு ஏற்ப கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அவர்களின் வாழ்வை ஸ்திரமாக்கி கொள்கிறார்கள்.

வாய்ப்புகள் எல்லாம் சாதி அடையாளத்தை மட்டுமே வைத்து தரப்படும். திறமைக்கு முன்னுரிமை இல்லை என்னும் இட ஒதுக்கீடு சட்டத்தால் அவர்கள் எல்லாம் இழந்தது அரசு கல்லூரி சேர்க்கை மற்றும் அரசு வேலை வாய்ப்புக்களை மட்டும் தான். ஆனால் இந்த தேசம் நல்ல தகுதியும் திறமையும் உள்ள துறைசார் வல்லுனர்களை இழந்து விட்டது என்பதே உண்மை.இட ஒதுக்கீடு என்னும் இந்த தேசத்தின் சாபக்கேட்டை நன்கு உணர்ந்ததனால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தயாரான அவர்களை அவர்களின் திறமைக்காக வெளிநாடுகள் அரவணைத்து கொண்டது. அந்த நாடுகளெல்லாம் இன்று தனித்துவமான களப்போட்டியில் இருக்கிறது.இன்று பல தனியார்,நிறுவனங்கள் வெற்றிகரமாக செயல்படவும் அரசு மற்றும் பொதுத்துறை சீரழியவும் இட ஒதுக்கிடே காரணம்.

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.? அரசு பள்ளிகளில் இருக்கும் சில திறமையான அர்ப்பணிப்பான ஆசிரியர்களின் துணையோடு கடின உழைப்பும் தன் விருப்பத்திலான பள்ளிக்கும் அப்பாற்பட்ட சிறப்பு பயிற்சிகள் முயற்சிகள் உள்ளிட்ட காரணங்களால் ஒரு சில மாணவர்கள் மட்டுமே நீட் உள்ளிட்ட தேர்வுகளில் வெற்றி பெற்று மருத்துவக் கல்வியை எட்டிப் பிடிக்க வேண்டிய இக்கட்டான நிலை.

மருத்துவத்துறையிலோ நலிந்த மக்கள் வேறு வழியின்றி அரசு மருத்துவமனை போவதும், ஓரளவு வசதி உள்ளவர்கள் எல்லாம் பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்று உயிர்காக்க வேண்டி தனியார் மருத்துவமனையை நாடுவதும் இன்றைய எதார்த்தமாக மாறிவிட்டது.

ஆனால் இதே சமூகம் இந்த இட ஒதுக்கீடு என்னும் சமூக அநீதியும் அதன் மூலம் திறமையாளர்களும் துறை சார்ந்த வல்லுனர்களும் இங்கு சோபிமுடியாமல் தங்களின் எதிர்கால நலன் கருதி வெளிநாடுகளுக்கு போவதையும் உணராமல், நன்கு படித்தவர்கள் மேதாவிகள் எல்லாம் தங்களின் சுயநலம் கருதி வெளிநாடுகளுக்கு போய் சம்பாதிக்கிறார்கள்! அதனால் தான் நாடு பின் தங்கி இருக்கிறது என்று பேசுவது எவ்வளவு பெரிய கொடுமை.?

தகுதியும் -திறமையும் முன்னிறுத்தி தங்களுக்கான வாய்ப்பை பெறுபவர்களால் மட்டுமே, அந்தந்த துறைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல முடியும். நேர்மையான நிர்வாகத்தையும் வழங்க முடியும். சலுகை- சன்மானம் என்ற குறுகிய வட்டத்திற்குள் வாய்ப்பு பெறுபவர்களை வைத்து வாக்கு வங்கி அரசியல் செய்ய முடியுமே தவிர, நிர்வாகத்தையும் சீர்படுத்த முடியாது. தேசத்தையும் வளர்ச்சி பாதையில் கொண்டு போக முடியாது. நான் என் திறமையால் தகுதியால் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன் என்பவர்களுக்கு மட்டுமே நெஞ்சில் ஒரு துணிவு இருக்கும். அது மட்டுமே அவர்களை நேர்மையாக துணிச்சலாக செயல்பட வைக்கும். சலுகை – சன்மானம் என்ற ரீதியில் வாய்ப்பை பெறுபவர்களுக்கு இயற்கையிலேயே ஆழ் மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கும் .அது அவர்களை திறம்பட செயல்படவும் விடாது. வெற்றிகரமான நிர்வாகத்திற்கு வழியும் தராது.

இட ஒதுக்கீட்டு சலுகையின் மூலம் வாய்ப்பு பெறுபவர்கள் எல்லோரும் திறமை அற்றவர்கள் என்று சொல்லவில்லை ஆனால் உரிய தகுதி திறமை இல்லாதவர்கள் கூட இட ஒதுக்கீடு என்ற சலுகை மூலம் வாய்ப்புகளைப் பெற முடிகிறது ஆனால் நல்ல தகுதியும் திறமையும் இருந்தால் கூட முன்னேறிய வகுப்பினர் என்ற காரணமாக அவர்களுக்குரிய வாய்ப்புகள் பறிக்கப்படுகிறது இதன் காரணமாக தேசத்தின் பல துறைகளும் பின் தங்குவதும் பல காரணங்களால் சீரழிவும் தொடர்கிறது இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படுவது அனைத்து தரப்பும் மக்களுமே.

தனிப்பட்ட நபர்களின் வளர்ச்சியை விட தேசத்தின் வளர்ச்சி முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு இட ஒதுக்கீடு என்பது சாதிய அடிப்படையில் இல்லாமல் பொருளாதார அடிப்படையில் இருக்கவும் தகுதி திறமைகளுக்கு முன்னுரிமை கொடுக்கவும் பாரதியர்கள் தயாராக வேண்டும் ஒருவேளை இனியும் இட ஒதுக்கீடு அவசியமானாலும் அது பொருளாதார அடிப்படையில் இருக்கட்டும். சாதிய அடையாளத்தை முன்னிறுத்தும் சமூக அநீதியாக இருக்க வேண்டாம். சாதிய இட ஒதுக்கீடு என்னும் சமூக அநீதி மறைந்து பொது சிவில் சட்டம் என்னும் சமூக நீதி மலரட்டும்.


Share it if you like it