காங்கிரசின் அழைப்பை துண்டித்தாரா விஜயதரணி ? – காங்கிரஸ் மேலிடம் ஷாக் !

காங்கிரசின் அழைப்பை துண்டித்தாரா விஜயதரணி ? – காங்கிரஸ் மேலிடம் ஷாக் !

Share it if you like it

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி எம்.எல்ஏ-வாக விஜயதரணி உள்ளார். 3-வது முறையாக விஜயதரணி எம்எல்ஏ-வாக இருக்கிறார். இந்த நிலையில் விளவங்கோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக உள்ள விஜயதரணி இன்று பாஜகவில் இணையுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாஜக தேசிய கூட்டம் இன்று தொடங்கும் நிலையில் ஜே.பி நட்டா முன்னிலையில் விஜயதரணி கட்சியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் குமரி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்த விஜயதரணி விளவங்கோடு எம்எல்ஏ ஆக உள்ளதால் குமரி தொகுதியை விஜயதரணிக்கு தர கட்சி மேலிடம் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணியை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும், தொடர்பு கொண்டால் அழைப்பை எடுக்க மறுக்கிறார் என்றும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா தெரிவித்துள்ளார். இதனை அடுத்து விஜயதரணி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Share it if you like it