ஹிந்து கடவுள்களை கிண்டல் செய்த லியோனி!

ஹிந்து கடவுள்களை கிண்டல் செய்த லியோனி!

Share it if you like it

தமிழக பாடநூல் கழக தலைவராக இருக்கும் பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் ஐ.லியோனி, பிரதமர் நரேந்திர மோடியை மோசமாக விமர்சித்தும், ஹிந்து கடவுளை கிண்டல் செய்தும் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

திண்டுக்கல்லில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக பாடநூல் கழகத் தலைவர் ஐ.லியோனி, “கல்விக்கும், செல்வத்திற்கும், வீரத்திற்கும் பெண்களை தெய்வமாக பார்த்தது ஹிந்து மதம். ஆனால், சரஸ்வதி கொடுக்க வேண்டிய கல்வியை பெண்களுக்கு நேரடியாக கொடுத்தது திராவிட மாடல் ஆட்சி. நீங்கள் பெண்களை தெய்வமாக்கி அழகு பார்த்தீர்கள். அதேசமயம், பெண்களை புதுமைப் பெண்களாக உருவாக்கி, உயர்கல்விக்கு மாதம் ரூ.1,000 கொடுத்து பட்டதாரியாக்கியது திராவிட மாடல் ஆட்சி. ஹிந்து மதத்தில் பெண்களை லட்சுமியாக பார்த்து வழிபட்டார்கள். ஆனால், பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கொடுத்தது திராவிட மாடல் ஆட்சி.

ஹிந்துக்களிடம் மாட்டிக் கொண்டு பிள்ளையார் கதறுகிறார். ‘நான் என்னடா தப்புப் பண்ணுனேன். 200 போலீஸ வச்ச என்ன கொண்டுட்டு போறீங்களே கடல்ல கரைக்க. ஏன்டா குற்றவாளிய கூட்டிட்டுப் போற மாதிரி இப்படி என்ன கூட்டிட்டு போறீங்க. முன்ன மாதிரி என்ன கூட்டி போங்கடான்னு’ விநாயகர் கதறுகிறார். விநாயகர், நாரதரே உலகம் என்றால் என்ன? அம்மை அப்பன் என்றால் என்ன? என்று கேட்டிருக்கிறார். அந்தாளு எனக்கு தெரியாதுன்னு சொல்லிருக்கலாம்ல. பிட்ட போடுறாரு, உலகம் என்றாலும், அம்மையப்பன் என்றாலும் ஒன்றுதான்னு. அப்படியானால், என் அம்மையப்பனை சுற்றினால் உலகத்தை சுற்றியதாகத்தானே அர்த்தம் என்று கேட்டு, அவங்க அப்பா அம்மாவை 3 தடவ சுற்றிட்டு ஞான பழத்தை வாங்கி சாப்பிட்டுருக்கிறாரு.

அந்த சமயம் பார்த்து முருகன் என்ட்ரி! எங்கே எனக்கு ஞானப்பழம். எனக்கு துரோகம் இழைத்துவிட்டீர்கள்? உடனடியாக நான் எனக்கென்று ஒரு மலையை நிறுவி தனியாக பழநி மலையில் குடியிருக்கப் போகிறேன்னு சொல்லிட்டு புறப்பட்டு போயிட்டாரு. தனக்கு சேர வேண்டியது கிடைக்கலன்னு, தனியா தனது சாம்ராஜ்யத்துக்கு போனாரு. உண்மையில், முதன் முதலில் சுயாட்சிக்கு வித்திட்டவரு முருகன்தான். எனக்குனு ஒரு தனி உலகம் வேணும்டானு, கட்சியெல்லாம் துவங்குவதற்கு முன்பே சுயாட்சிக்கு குரல் கொடுத்தவரு முருகன். சுயாட்சி நடத்திக் கிட்டிருக்காரு.

அதேமாதிரி, ராஜராஜசோழன் ஹிந்துவா? அது ரொம்ப முக்கியம். 1,500 வருடத்திற்கு முன்னாடி வாழ்ந்த ராஜா, ஹிந்துவா இருநதால் என்ன? எதுவா இருந்தா என்ன? இதனால் நமக்கு கஞ்சி கிடைக்கப் போகுதா? ஹிந்துவில் எந்த ஜாதியாக இருந்தாலும் கோயிலுக்கு செல்ல அனுமதி கிடைக்கிறதா? இதை சிந்திப்பதை விட்டுவிட்டு ராஜராஜசோழன் ஹிந்துவான்னு பேசுறாங்க. மதத்தால் மக்களை பிளவுபடுத்தி கொண்டிருக்கும் பா.ஜ.க.வை ஓரம்கட்ட வேண்டும். பாரத பிரதமர் நரேந்திர மோடி மாதிரி வாயிலேயே வடை சுடுர தலைவர பார்க்க முடியாது . உளுந்து, எண்ணெய் எதுவும் இல்லாம வடைய சுட்டு எடுத்து வச்சிட்டே இருப்பாரு. பேச்சப் பார்த்தீங்கன்னா, அடேங்கப்பா. எப்படி பேசுவாரு கேட்டீங்களா. இதவச்சுதான் மோடி ஓட்டிட்ருக்காரு 8 வருஷமா.

15 லட்சம் ரூபாய் போடுவேன் சொன்னாரு. இருக்கிறதையும் பிடிங்கிட்டு விட்டுட்டாரு. இன்னும் கொஞ்சநாள் கழிச்சு இப்படி அறிவிச்சாலும் அறிவிப்பாங்கே, பாரதிய ஜனதா கட்சி வந்தால் அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு சட்டம் இனிமேல் கிடையாது. சனாதனம்தான் இந்தியாவினுடைய சட்டம்னு. 2,000 ரூபாய் நோட்டு செல்லாதுனு எப்படி அறிவிச்சாரோ, அதேமாதிரி அறிவிக்கும் காலம் பி.ஜே.பி. வந்தால் உண்டாகும். அன்றைக்கு யாரும் வெளியே வர முடியாது. பெண்கள் படிக்க முடியாது. மற்ற மதத்தினர் நிலை என்னாகும்? சிறுபான்மையினர் நிலை என்னாகும்னு நினைச்சுக்கூட பார்க்க முடியாது” என்று பேசியிருக்கிறார்.

அரசு நியமன பதவியில் இருக்கும் திண்டுக்கல் லியோனி, ஹிந்து மத கடவுளை கிண்டல் செய்தும், பிரதமர் நரேந்திர மோடியை மோசமாக விமர்சனம் செய்தும் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக லியோனிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. லியோனி இவ்வாறு பேசுவது இது முதல்முறை அல்ல. தி.மு.க. பொதுக்கூட்ட மேடைகளில் பேசும்போதும் சரி, பட்டமன்றத்தில் பேசும்போதும் சரி, மோடியையும், ஹிந்து கடவுள்களையும் இழிவுபடுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஆகவே, அரசு பொறுப்பில் இருக்கும் ஒரு நபர், குறிப்பட்ட மதக் கவுள்களை பற்றி இழிவாகப் பேசுவது தவறு. ஆகவே, அவரை பாடநூல் கழக தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஹிந்துக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


Share it if you like it