காற்றில் பறந்த திமுகவின் தேர்தல் வாக்குறுதி!
1. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்று மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்தது.
2. தேர்தலுக்கு முன்பு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக, மக்களிடம் பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வீசியது.
3. அதில் முக்கியமானது நகை கடன் தள்ளுபடி.
4. திமுக ஆட்சிக்கு வந்தால் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுகவின் மூத்த நிர்வாகிகள் மக்களிடம் வாக்குறுதி கொடுத்தனர்.
5. மு க ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் ஒரு படி மேலே சென்று, ‘நகைக் கடன் வாங்கினால் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும்.’
6. ‘வரப்போவது நம்ம ஆட்சி. அதனால நாளைக்கே போய் நகை கடன் வாங்கிடுங்க’.
7. ‘திமுக ஆட்சிக்கு வந்தவுடனே அதெல்லாம் தள்ளுபடி செய்யப்படும்’ என்றார்.
8. இந்த ஆசை வார்த்தையில் மயங்கி மக்களும் திமுகவுக்கு ஓட்டு போட்டு ஆட்சி கட்டிலில் அமர்த்தினர்.
9.சுமார் 45 லட்சம் மக்கள் நகை கடன் தள்ளுபடி கேட்டு விண்ணப்பித்து இருந்தனர்.
10. இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின், நகை கடன் தள்ளுபடி பெறுவதற்காக முறைகேடாக நகை கடன் வாங்கி இருந்தால், அது தள்ளுபடி செய்யப்பட்டாது என்று சட்டமன்றத்தில் வெடித்தார்.
11. நகைக் கடன் கேட்டு விண்ணப்பித்த 45 இலட்சம் மக்களில் சுமார் 35 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட
தாக அறிவிக்கப்பட்டுள்ளது.
12. பேராசையால் பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஓட்டு போட்ட மக்கள் தலையில் துண்டை போடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.