பொறுப்பாக பேசுங்கள் என அமைச்சர்களிடம் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கெஞ்சும் வகையில் பேசியிருக்கிறார். இச்சம்பவம், பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில், திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த, அரசு அமைந்து இரண்டு வருடங்களை பூர்த்தி செய்துள்ளது. இந்த, ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இல்லை என்பதே நிதர்சனம். நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கு மோசமடைந்து வருகிறது. இதன்காரணமாக, பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், துறை வாரியாக அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் அவற்றை செயல்படுத்தும் நடைமுறைகள் குறித்து முதல்வர் ஆலோசித்தார். இதையடுத்து, அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு பேசினார் ;
மூத்த அமைச்சர்களின் சர்ச்சைப் பேச்சுகளும், அதனால் எழும் விமர்சனங்களும் வருத்தம் அளிப்பதாக உள்ளது. விமர்சனத்திற்கு உள்ளாகும் வகையில் பேசுவதை மூத்த அமைச்சர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இதனை, பலமுறை அறிவுறுத்தியுள்ளேன். எனினும், மூத்த அமைச்சர்கள் சிலர் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றனர் என வேதனையுடன் பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தவறு செய்யும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிவில்லாமல் அவர்களிடம் கெஞ்சும் சர்வாதிகாரியை இப்போதுதான் நாங்கள் பார்க்கிறோம் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்