காலாவதியான கொள்கைதான் திராவிட மாடல்: உ.பிஸ்களுக்கு பி.பீ. ஏற்றிய கவர்னர் ஆர்.என்.ரவி!

காலாவதியான கொள்கைதான் திராவிட மாடல்: உ.பிஸ்களுக்கு பி.பீ. ஏற்றிய கவர்னர் ஆர்.என்.ரவி!

Share it if you like it

திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கைகளைக் கொண்டது என்று கூறி, உ.பி.ஸ்களுக்கு பி.பீ.யை ஏற்றி இருக்கிறார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. இதனால், தி.மு.க.வினர் கதறிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் தி.மு.க. தலைமையிலான தமிழக அரசுக்கும் ஏழாம் பொருத்தமாக இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த மோதல் சட்டமன்றத்தில் கவர்னருக்கு எதிராக தி.மு.க. தீர்மானம் கொண்டுவரும் நிலைக்குச் சென்றதும், சட்டமன்றத்தை துச்சமென மதித்து கவர்னர் வெளிநடப்பு செய்த சம்பவமும் வரலாற்று சுவடுகள். அதேபோல, ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் கவர்னருக்கும், தி.மு.க. அரசுக்கும் இடையே நடந்த மோதல் உச்சகட்டம். ஆனாலும், கவர்னர் தனது அதிரடிகளை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறார்.

இந்த நிலையில், ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு பேட்டி அளித்த கவர்னர் ஆர்.என். ரவி, திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கைகளை கொண்டது. இதை வைத்துக்கொண்டு திராவிட மாடல் என்ற பெயரில் தி.மு.க. ஆட்சி நடத்துகிறது என்று அட்டாக் செய்திருக்கிறார். பேட்டியில் அவர் மேலும் கூறுகையில், “நான் திராவிட ஆட்சி முறையை பாராட்டி ஆதரிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். அத்தகைய ஆட்சிமுறை இங்கு எதுவும் இல்லை. இது ஒரு அரசியல் முழக்கம் மட்டும்தான். காலாவதியான சித்தாந்தத்தை நிலைநிறுத்துவதற்கான ஒரு முயற்சி மட்டுமே உள்ளது.

‘ஒரே பாரதம், ஒரே இந்தியா’ என்ற கருத்தை ரசிக்காத ஒரு சித்தாந்தம் திராவிட மாடல் சித்தாந்தம். தேசிய சுதந்திரப் போராட்டத்தை சுட்டிக் காட்டும்போது, தமிழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சுதந்திரப் போராளிகள் தங்கள் உயிர் உட்பட எல்லாவற்றையும் கொடுத்த வரலாற்றை எப்படி நினைவிலிருந்து அழிக்க முற்படுகிறது? மாறாக, மொழி, இனவெறியை செயல்படுத்தும் கொள்கையாளர்களை முன்னிலைப்படுத்துகிறது. சமீபத்திய பட்ஜெட் உரையில் மற்ற மொழிகளை தவிர்த்து, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் 3.25 லட்சம் புத்தகங்களைக் கொண்ட கலைஞர் நூலகத்தை அரசு அமைக்கப் போகிறது என்று கூறப்பட்டிருக்கிறது. இது பிரிவினைவாத உணர்வை வளர்க்கும் கருத்தியலாகும்” என்று கூறியிருக்கிறார்.

தி.மு.க. அரசின் பிரதான கொள்கையான திராவிட மாடல் ஆட்சி என்பதை கவர்னர் ரவி, இப்படி கழுவி ஊற்றி தி.மு.க.வினருக்கு பி.பீ.யை ஏற்றி விட்டிருக்கிறார். இனி உ.பி.ஸ்களின் கதறல் சத்தம் அதிகமாகவே இருக்கும்.


Share it if you like it