சொத்துக் குவிப்பு வழக்கு: ஆ.ராசா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

சொத்துக் குவிப்பு வழக்கு: ஆ.ராசா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

Share it if you like it

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், ஆ.ராசா உட்பட 5 பேர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது.

தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவர் ஆ.ராசா. நீலகிரி தொகுதி எம்.பி.யான இவர், மத்திய அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, 1999-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டுவரை மத்திய அமைச்சர் பதவியை பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஆ.ராசா மீது புகார் வைக்கப்பட்டது. இதனடிப்படையில் 2015-ம் ஆண்டு ஆ.ராசாவின் வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிரடி ரெய்டு நடத்தியது. இந்த ரெய்டில் ஆ.ராசாவுக்குச் சொந்தமான டெல்லி, சென்னை, திருச்சி, நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் வீடு, அலுவலகங்களும் தப்பவில்லை.

சென்னையில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. இது தொடர்பாக, ஆ.ராசாவிடம் நீண்ட நேரம் விசாரணையும் நடத்தப்பட்டது. இந்த ரெய்டில் பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆ.ராசா மீதான 2ஜி அலைக்கற்றை வழக்கு உச்சத்தில் இருந்த நிலையில் இந்த ரெய்டு நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது, 2ஜி வழக்கில் கிடைத்த சில ஆவணங்கள் அடிப்படையில்தான் இந்த ரெய்டே நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக, ஆ.ராசா, அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என மொத்தம் 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக இத்தனை நாட்களாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணை தற்போது முடிவிற்கு வந்திருக்கிறது.

இதையடுத்து, 7 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. சி.பி.ஐ. வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதில், ஆ.ராசா வருமானத்திற்கு அதிகமாக 5.53 கோடி ரூபாய்வரை சொத்து சேர்த்ததாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ஆ.ராசா தவிர மேலும் 4 பேர் பெயரும் இந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றிருக்கிறது.


Share it if you like it