கவர்னர் ஆர்.என்.ரவியை அவன், இவன் என்று முதல்வர் ஸ்டாலின் ஏகவசனத்தில் பேசியிருக்கும் நிலையில், தலைவனே இப்படி இருந்தா, தொண்டன் பின்ன எப்படி இருப்பான் என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
தமிழக சட்டமன்றத்தின் நிகழாண்டுக்கான கூட்டத் தொடர் கடந்த 9-ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. தமிழக அரசு கொடுத்த இந்த உரையில், வீரம், விவேகம் நிறைந்த திராவிட மாடல் ஆட்சி என்பது உட்பட தி.மு.க. அரசை புகழும் மற்றும் சர்ச்சைக்குரிய வார்த்தைகள் மற்றும் வாசகங்களை கவர்னர் படிக்காமல் தவிர்த்து கடந்து சென்று விட்டார். காரணம், ஏற்கெனவே கவர்னருக்கு இந்த உரை வழங்கப்பட்டபோது, அதை தமிழ் நன்கு தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டதோடு, அவற்றில் திருத்தம் செய்யுமாறு கவர்னர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மேற்படி திருத்தங்களை செய்யாததோடு, உரை அச்சுக்குப் போய் விட்டதாகவும், படிக்கும்போது திருத்தி படித்துக் கொள்ளலாம் எனவும் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையடுத்தே, மேற்கண்ட வார்த்தைகளை கவர்னர் தவிர்த்து விட்டு படித்திருக்கிறார். ஆனால், இதை ஏற்கெனவே எதிர்பார்த்திருந்த முதல்வர் ஸ்டாலின், கவர்னருக்கு எதிராக, ரெடியாக துண்டுச் சீட்டில் எழுதி கொண்டு வந்திருந்த தீர்மானத்தை வாசித்தார். இது சட்டமன்ற மரபை மீறிய செயல் என்பதால் கவர்னர் வெளிநடப்பு செய்தார். இது முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களுக்கு அவமானமாகப் போய்விட்டது. நாம் ஒன்று நினைக்க, அது நமக்கே பேக் ஃபயர் ஆகிவிட்டதே என்று நொந்து போய் விட்டனர். எனவே, கவர்னருக்கு எதிராக கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் தூண்டி விட்டிருக்கிறார். அதாவது, ஒன்றை செய்ய வேண்டாம் என்றால், தி.மு.க. பாணியில் செய் என்று அர்த்தமாம்.
எனவே, தி.மு.க. அமைப்புச் செயலாளராக இருக்கும் ரெட் லைட் புகழ் ஆர்.எஸ்.பாரதி, ஆபாச பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி (இவன் வாயை திறந்தாலே கூவம் நாத்தம்தான் வீசும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்) உள்ளிட்டோர் கவர்னரை அவன், இவன் என்று ஏகவசனத்தில் பேசியதோடு, அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு ஆபாச வார்த்தைகளால் விமர்சித்தனர். உச்சகட்டமாக, பாரதி பேசும்போது, சேகர்பாபு மாதிரி ஆட்களை ஏவி விட்டிருந்தால் உருப்படியா வீடு போய் சேர்ந்திருக்க முடியுமா என்றும், கூவம் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசும்போது, பயங்கரவாதியை ஏவி சுட்டுக் கொல்வோம் என்றும் கவர்னருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இவர்கள் இவ்வாறு பேசியது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், நானும் சளைத்தவனில்லை என்பதுபோல, ஸ்டாலினும் தரம் தாழ்ந்து பேசியிருப்பதுதான் வேதனை.
சென்னையில் நடந்த தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “இந்த நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்ளக் கூடாது என்று எனது குடும்பத்தினரும், மூத்த நிர்வாகிகளும், மருத்துவர்களும் கூறினார்கள். அதையும் மீறி நான் வந்திருக்கிறேன். காரணம், தமிழ்நாடு என்று பெயர் சூட்டும் விழாவில் கலந்துகொள்ளாவிட்டால் இந்த உயிர் இருந்து என்ன பயன் என்று சொன்னர் அண்ணா. ஆனால், இன்றைக்கு ஒருவன் தமிழ்நாடுன்னு சொல்லக் கூடாதுன்னு பொழம்பிக்கிட்டு இருக்கானே, நான் கேட்கிறேன். இதற்கு மேல் விளம்பரம் வேண்டாம்” என்று கவர்னரை அவன், இவன் என்று ஏகவசனத்தில் பேசியிருக்கிறார்.
இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்துவிட்டுத்தான் தலைவனே இப்படி இருந்தால் தொண்டன் எப்படி இருப்பான் என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, இந்த பேச்சின் மூலம் ஸ்டாலின் மெச்சுரிட்டி அற்றவர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். அதாவது, ஒரு கட்சியின் தலைவனோ அல்லது தொண்டனோ அல்லது நிர்வாகியோ அல்லது மற்றவர்களோ யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம்.
ஆனால், ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கக் கூடியவர்களுக்கு சில தாரமீக கடமைகளும் பொறுப்புகளும் இருக்கிறது. இதை மீறி அவர் வெளியில் சில வார்த்தைகளை பேசும்போது அது மிகப்பெரிய அளவில் விவாதப் பொருளாகிவிடும். எனினும், இதெல்லாம் தெரியாமல் ஸ்டாலின் பொதுவெளியில் கண்டமேனிக்கு பேசி வருகிறார். இவரது பேச்சுக்கள் பலவும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதாகவும் இருக்கின்றன. அந்தவகையில், தற்போது மாநிலத்தின் முதல் குடிமகனான கவர்னரை, அவன் இவன் என்று ஒருமையில் பேசியிருப்பது மிகவும் தவறான செயல். இதற்கு அவர் மன்னிப்புக் கோரும் காலம் வெகு தொலைவில் இல்லை என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.