தி.மு.க., காங்கிரஸை பங்கம் செய்த சாமானியன்!

தி.மு.க., காங்கிரஸை பங்கம் செய்த சாமானியன்!

Share it if you like it

தி.மு.க.காரனுங்க கிரிமினல்கள், காங்கிரஸ் கட்சிக்காரனுங்களுக்கு அறிவே இல்லை என்று சாமானியன் ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் தற்போது ஒரு சாமானியன் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அக்காணொளியில், அண்ணாமலை ஊழல் பட்டியல் வெளியிடுகிறார் என்றால், நிச்சயமாக ஆதாரம் இல்லாமல் வெளியிட மாட்டார். இது சி.பி.ஐ.க்கு போகும். சி.பி.ஐ. விசாரணைக்கு பிறகு உண்மை வெளிச்சத்துக் வரும். பா.ஜ.க. ஒழிக என்று தி.மு.க.வினர் சொல்வதால் பா.ஜ.க. ஒழியப்போவதில்லை. மோடி பிரதமராக வடமாநிலத்திலுள்ள 4 ஸ்டேட் போதும்.

மன்மோகன் சிங் மிகவும் திறமைசாலி. ஆனால், அவர் பிரதமராக இருந்தபோது சுயமாக செயல்பட காங்கிரஸ் கட்சியினர் விடவில்லை. கருணாநிதியின் மகன் அழகிரி எல்லாம் ரசாயனத்துறை அமைச்சராக இருந்தவர். அவருக்கு ரசாயனத்தைப் பற்றி என்ன தெரியும்? டெல்லிக்கு போற விமானத்துல ஏறி உட்கார்றதுக்கு பதிலா, டெல்லியில இருந்து வந்த விமானத்தில் ஏறி உட்கார்ந்தவர் அவர். ஜி20 மாநாடு இதுவரை இந்தியாவில் நடந்திருக்கிறதா? மோடிக்கு அந்த பாக்கியம் கிடைத்திருக்கிறது.

காரணம், உலகளவில் மோடி செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்து வருகிறார். ரஷ்யா – உக்ரைன் போர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதை தடுக்க ஐ.நா. சபையால் கூட முடியவில்லை. ஆனால், ரஷ்ய அதிபர் புடினுக்கும், மோடிக்கும் நல்ல உறவு இருக்கிறது. ஆகவே, அவர் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவார் என்று உலக நாடுகள் நம்புகின்றன. அதேபோல, கொரோனாவுக்கு பிறகு உலக நாடுகளின் பொருளாதாரம் படுவீழ்ச்சி அடைந்து விட்டது. ஆனால், இந்திய பொருளாதாரம் சீராக இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் மோடியின் திறமைதான் என்று கூறியிருக்கிறார்.

இந்தக் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it