பேசுறவனுக்கு கொஞ்சமாச்சும் மூளை இருக்கணும் என்று தி.மு.க. மாணவர் அணித் தலைவர் ராஜிவ் காந்தியை, அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் விமர்சனம் செய்திருக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகம் முழுவதும் திராவிட மாடல் பயிற்சி பாசறை என்கிற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அந்த வகையில், தி.மு.க. மாணவர் அணித் தலைவர் ராஜிவ் காந்தி ஒரு பயிற்சி பாசறையில் கலந்துகொண்டு பேசினார். இதுகுறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், நான் காரில் போய்க்கொண்டிருந்தேன். அப்போது ஒரு இடத்தில் ஒரே கூட்டமாக இருந்தது. நிறைய கார்கள் நின்று கொண்டிருந்தன. அதைப் பார்த்துவிட்ட அங்கிருந்த தி.மு.க.காரர் ஒருவரை அழைத்து கேட்டேன்.
அவர், திராவிட மாடல் பயிற்சி பாசறை நடக்கிறது என்று கூறினார். உடனே, யார் பேசுவது, அப்படி என்னதான் பேசுகிறார் என்பதை அறிந்து கொள்வதற்காக நானும் உள்ளே சென்றேன். அப்போது, ஒருவன் பேசிக் கொண்டிருந்தான். சத்தம் மட்டும்தான் கேட்டது, ஆளை மேடையில் காணவில்லை. எங்கடா என்று தேடிப் பார்த்தால் கூட்டத்தோடு கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்தான். பேசுபவனுக்கு முதலில் கொஞ்சமாச்சும் மூளை வேண்டும் என்று கூறியிருக்கிறார். துரைமுருகன் ஏன் அப்படிச் சொன்னார்? தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை பாருங்கள்…