சங்கர் சிமெண்ட்டில் கட்டினால் பார்லிமெண்ட்  ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும்: சூப்பர் சுருளி போல் பதில் அளித்த அமைச்சர்!

சங்கர் சிமெண்ட்டில் கட்டினால் பார்லிமெண்ட் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும்: சூப்பர் சுருளி போல் பதில் அளித்த அமைச்சர்!

Share it if you like it

பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு முறையான பதில் அளிக்காமல் அமைச்சர் உதயநிதி மழுப்பலாக பதில் அளித்த காணொளி பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க. இளைஞரணி செயலாளர் மற்றும் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர், தமிழக முதல்வர் ஸ்டாலினை காட்டிலும் அதிகமாக உளறி கொட்டுவதை வழக்கமாக கொண்டவர். அந்தவகையில், இவரிடம் எந்த துறை சார்ந்த கேள்வியை கேட்டாலும் அவரிடம் உரிய பதில் கிடைக்காது. கட்சியின் அடிமட்டத்தில் இருந்து படிபடியாக முன்னேறி வந்திருந்தால் அரசியல் என்றால் என்னவென்று தெரிந்திருக்கும். ஆனால், தந்தையின் தயவில் வந்த அவருக்கு இது எல்லாம் எப்படி? தெரியும் என்பதே அனைவரின் குற்றச்சாட்டாக உள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அமைச்சர் உதயநிதி பத்திரிகையாளர்களை சந்தித்திருக்கிறார். அப்போது, விளையாட்டுத்துறை சார்ந்த கேள்விகளை அமைச்சரிடம் நிருபர்கள் முன்வைத்தனர். அதற்கு, அவர் அளித்த பதில்தான் சூப்பர் சுருளி வடிவேலுவை நினைவுப்படுத்துவது போல அமைந்து இருந்தது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it