குஜராத்தில் ஆக்கிரமிப்பு மசூதியை அகற்ற எதிர்ப்பு: வன்முறையில் ஒருவர் உயிரிழப்பு… 200 பேர் கைது!

குஜராத்தில் ஆக்கிரமிப்பு மசூதியை அகற்ற எதிர்ப்பு: வன்முறையில் ஒருவர் உயிரிழப்பு… 200 பேர் கைது!

Share it if you like it

குஜராத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட மசூதியை அகற்றக்கோரி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முஸ்லீம்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதில், ஒருவர் உயிரிழந்த நிலையில், 200-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

குஜராத் மாநிலம் ஜூனாஹத் நகரில் மஜேவாடி கேட் பகுதியில் இஸ்லாமியர்களின் மசூதி ஒன்று உள்ளது. இதன் அருகே மற்றொரு மசூதி கட்டப்பட்டது. ஆனால், இந்த புதிய மசூதி அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, மசூதி சட்டப்பூர்வமாக கட்டப்பட்டதற்கான ஆவணங்களை 5 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இல்லையேல் மசூதி அகற்றப்படும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும், இதற்கான செலவை மசூதியை நிர்வகிக்கும் அமைப்பே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்து, அதற்கான நோட்டீஸும் அந்த மசூதியில் ஒட்டப்பட்டது.

இந்த நிலையில், மாநகராட்சி பிறப்பித்த நோட்டீஸுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று இரவு இஸ்லாமிய மதத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது, நேற்று இரவு தொழுகையை முடித்துவிட்டு வந்த 500-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, வன்முறையிலும் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்த வன்முறையாளர்கள், போலீஸ் சோதனைச் சாவடி மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் டி.எஸ்.பி. உட்பட 3 போலீஸார் காயமடைந்தனர். இதையடுத்து, போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இதில், ஒருவர் உயிரிழந்தார். இந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த வன்முறை தொடர்பாக 200-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.


Share it if you like it