மக்களுக்கு ’பால் ஊற்றிய’ ஆவின் நிர்வாகம்!

மக்களுக்கு ’பால் ஊற்றிய’ ஆவின் நிர்வாகம்!

Share it if you like it

’ஆவின்’ பால் அளவு வெகுவாக குறைந்து இருப்பது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கோவத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றன.

சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, தமிழக மக்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக அடுத்து பேருந்து கட்டண உயர்வு என பல வகையிலும் வரிகளை விதித்து தமிழக அரசு பொதுமக்களை தொடர்ந்து துன்புறுத்தி வருகிறது. இதன் காரணமாக, ஏழை எளியவர்கள் கடும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். தி.மு.க. ஆட்சி அமைந்த பின்பு 2 முறை பால் மற்றும் பால் பொருட்களின் விலையை உயர்த்தி இருக்கின்றன.

மத்திய அரசின் ஏற்பாட்டில், 47-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அரிசி, பருப்பு, கோதுமை, உள்ளிட்ட பொருட்களுக்கு 5% சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பது என அனைத்து மாநிலங்களும் ஒப்புதல் தெரிவித்து இருந்தன. அதேபோல, பால், தயிர், லஸ்ஸி மற்றும் பன்னீர் உள்ளிட்ட பால் பொருட்களுக்கும் 5% சதவீதம் வரி விதிக்கப்பட்டது. ஆனால், ஜி.எஸ்.டி. சொன்ன விலையை காட்டிலும், மூன்று மடங்கு விலையை விடியல் அரசு உயர்த்தி இருந்தன.

தமிழக அரசின் இந்த அடாவடி போக்கின் மூலம் ஏழை, எளியவர்களின் குடும்பங்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன. தமிழக அரசு விதித்த வரிக்கு, மத்திய அரசு மீது வீண் பழியை சுமத்தி இருக்கும் ஸ்டாலின் அரசுக்கு பொதுமக்கள் உட்பட சமூக ஆர்வலர்கள் வரை கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில், பால் மற்றும் பால் பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், விடியல் அரசு பால் விலையை குறைக்க சொன்னால் பால் அளவை குறைத்து இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டினை முன்வைத்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக விற்பனைக்கு வரும் பால் அளவு வெகுவாக குறைந்து இருக்கிறது. அதாவது, ஆவின் பால் பாக்கெட்டின் கவர் இரண்டு கிராம் போக, பாலின் எடை 515 கிராமுக்கு குறையாமல் இருக்க வேண்டும். ஆனால், பாலின் அளவு தற்போது வெறும் 430 கிராம் மட்டுமே உள்ளது.

தமிழக மக்கள் பாதிக்காத வண்ணம் மின் கட்டணம் உயர்த்தப்படும் எப்படி? தினமும் 4 மணிநேரம் மின்வெட்டு உண்டு என அண்மையில் ஒரு மீம்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருந்தது. அதையே, ஓவர் டேக் செய்யும் விதமாக, பால் விலையை குறைக்க சொன்னால் பாலின் அளவையே குறைத்து தமிழக மக்களுக்கு தி.மு.க. அரசு பால் ஊற்றி இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Image

Share it if you like it